RSS

Monthly Archives: April 2016

தேசம் புகழ தளைக்கும் தாமரை தடாகம்

தாமரைத் தடாகம் என்றொரு பனுவல்
….தந்தனல் கிழக்கு மண்ணதன் பேரால்
வேரினை விட்டது விரிந்திடும் உலகில்
…..வீசிடும் வாசம் மண்ணதைப் பேசும்
மருதூர் தந்திட்ட மகத்தான கவிஞர்
…..மனதில் மலர்ந்த மலரது நிஜத்தில்
விருதுகள் சூடும் வியத்தகு நூலதாம்
…..வெளியீட்டு விழா சிறக்கப் பூக்கும்
பாய்ந்து வரும் வெள்ளமென பாவியற்றும்
…..பாசமிக்க சோதரியாம் பண்புடையாள் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on April 27, 2016 in 1

 

மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமியாராக வாழ்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா? ஒரு அலசல்

மாமியார் – மருமகள் சண்டை உருவாக காரணம் யார்? மனைவியா? மாமியா? கணவரா? அல்லது மூவருமா?

அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் ”மேரிடல் கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ தமிழர்கள் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஒரு சர்வதேசப் பிரச்சினை இது!

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத்துவங்கும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 24, 2016 in 1

 

பூமி தினம் …

Abdul Gafoor

பூமி தினம் …

பூமி
இயற்கையின் தொட்டிலில்
பசுமையை தாலாட்டுது
வாழ்ந்திடும் உயிர்களை
மடியமர்த்தி அரவணைக்குது …

பூமி
மழையில் நனைந்து
குளிரில் நடுங்குது
வெயிலில் காய்ந்து
வறட்சியில் ஒடுங்குது ….

பூமி
விவசாயிகள் உழைக்க
விவசாயம் தழைக்க
நட்டுவித்த நாற்றுகளை
உயிராக்கி பயிராக்குது …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 22, 2016 in 1

 

உலக (நிஜ) நாயகர்கள்

Vavar F Habibullah

ஹிட்லரைப் போல் நடிப்பதற்கு ஹாலிவுட்டில் கூட சிறந்த நடிகர்களால் இயலவில்லை.
அவனது நடை, தோற்றம், பேச்சு மற்றும் ஆளுமையை ஒரு நடிகனால் முழுமை படுத்த முடியவில்லை.
1939 முதல் 1945 முடிய உலக அரசியல், அவன் கைகளில் அடங்கிக் கிடந்தது. இரண்டாம் உலகப் போரை முன்னின்று நடத்தி உலக வல்லரசுகளை மிரள வைத்தான் அவன். அவனாலேயே நாடுகள் கூட, நேச நாடுகள்(allied) என்றும், நாச நாடுகள்(Axis) என்றும் இரண்டாக அணி பிரிந்தன.
இத்தாலியின் முசோலினியையும், ஜப்பானின் டோஜோவையும் துணைக்கு வைத்துக் கொண்டு அவன் ஆடிய ஆட்டம் கண்டு உலகத் தலைவர்கள் வாய் பிளந்து நின்றனர்.
இங்கிலாந்தின் சர்ச்சிலையும், அமெரிக்காவின் ரூஸ்வெட்டையும், ரஷ்யாவின் இரும்பு மனிதன் ஜோசப் ஸ்டாலினையும் கண்களில் விரல் விட்டு ஆட்டியவன் ஹிட்லர். இவர்களைத்தான் உலகம் ‘மூன்று பலம் வாய்ந்த நபர்கள்'(the big three) என்று வர்ணித்தது.
உலகப் போரின் ஆரம்ப நாட்களில்.. இங்கிலாந்தின் பிரதமர் சேம்பர்லைனால், ஹிட்லரை தாக்கு பிடிக்க இயலவில்லை.
பதவியை துறந்த அவர் இடத்தை, வின்ஸடன் சர்ச்சிலால் மட்டுமே நிரப்ப முடிந்தது. இதற்கெல்லாம் அஞ்சாத ஹிட்லர், இங்கிலாந்து மீது குண்டுமழை பொழிந்தான். பக்கத்து நாடான போலந்தை ஆக்ரமித்தான். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 21, 2016 in 1

 

கலைகளும் கலைஞர்களும் …

-அப்துல் கபூர்-

கலைகளும் கலைஞர்களும் …
கற்பனை நூலெடுத்து
சிந்தனைத் தறியில்
எழுத்துகள் கோர்த்து
வார்த்தைகள் நெய்யும்
கவிஞனின் கவிதைகள் ….
கற்களில் உளிகளிட்டு
மனசில் பதுக்கிய
எண்ணத் துளிகளிட்டு
வடிவமாய் செதுக்கிய
சிற்பியின் சிற்பங்கள் …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 21, 2016 in 1

 

எதுவும் நம்முடையதில்லை!

burning-houseவெளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.
ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும் விரும்பினார். ஊரில் பலரும் அந்த வீட்டுக்கு இரட்டை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தனர்.
ஆயினும் அந்த மனிதர் அந்த வீட்டை விற்க விரும்பவில்லை. அந்த வீடு இன்று தன் கண்முன்னால் நெருப்புக்கு இரையாவதைக் கண்டு அவருக்கு சொல்லொணாத் துயரம். துக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ஒரு பெரும் கூட்டம் வீடு எரிந்து அடங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 19, 2016 in 1

 

கவிக்கரை_சுவடுகள்‬ கவிதை தொகுப்பு-சுஹைனா மஜ்ஹர்

13051756_1277615348920424_9143151761320778147_nஇறைவனருளால் எமது ‪#‎கவிக்கரை_சுவடுகள்‬‬ கவிதை தொகுப்பு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் மே மாதம் வெளியிட இருக்கும் புத்தகத்துக்கு இப்பொழுதே புக்கிங் செய்து உங்கள் ஆதரவை தர கோருகிறேன்.
இப்பொழுது புக்கிங் செய்பவர்களுக்கு இந்தியாவெங்கும் கூரியர் இலவசம். புத்தக விற்பனையில் 10 சதவீதம் சதகா(தர்மம்) செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.
புத்தக பெயர்: கவிக்கரை சுவடுகள்
பக்கங்கள்: 100+
விலை: ருபாய். 110 Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on April 18, 2016 in 1