RSS

நாவைப் பேணுதல் நற்குணங்களில் ஒன்று !

07 Apr

நாவைப் பேணுதல்
நற்குணங்களில் ஒன்று !
நாளொன்றும் பொழுதொன்றும்
நரம்பில்லா நாக்கை திரித்து பேசும்
நயவஞ்சகர்களே
நன்றாய் கேளுங்கள்!
ஒலிபெருக்கியில் ஊளையிடும்
ஒற்றை புத்திகாரர்களே
உள்ளத்தில் உள்வாங்கி
உணர்ந்துக் கொள்ளுங்கள் !
ஊடக உலகமிது
ஒளித்து வைக்க முடியாது !
என்றோ பேசிய பேச்சுக்கள்
இன்றது எமனாக மாறக்கூடும் !
துருப்பிடித்த உங்களின்
துவேசப் பேச்சுக்களை
தோண்டியெடுத்து மீண்டும்
தூக்கில் போடும் !
அப்பொழுது உங்கள் அழகு முகம்
ஆயிரம் கோணங்கள் போகுமே !
அனைவருக்கும் அது நினைவிருக்கட்டும் !
சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு
சொரணையின்றி மன்றாடும்
சுதியிழந்து மதியிழந்து சோரம் போகும்
சொல்லிழுக்கு தேவைதானா?
நாவைப் பேணுதல்
நற்குணங்களில் ஒன்று !

abdul kaium அப்துல் கையூம்

அப்துல் கையூம்
 
Leave a comment

Posted by on April 7, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: