RSS

நியதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!

11 Apr

Yasar Arafat

The message give by the Holy Prophet (Peace BE Upon Him) at the time f Conquering Makkah... He is So humble.....

குதிரைகளுக்கு வயதாகும்; எல்லா நேரமும் வெற்றிப்பெறக்கூடிய குதிரையென்ற ஒன்று இல்லை; நியதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; செத்தப்போனவர்களின் முன்பு உங்கள் அன்பை வெளிப்படுத்தி கண்ணீர் சிந்துவதில் பிரயோசனமில்லை; வாழும்போது அவர்களிடம் ஒருமுறையாவது பகிர்ந்துக்கொள்ளுங்கள்; அன்பு அவ்வளவு பரிசுத்தமானது; நீங்கள்தான் அதன் மீது கரிசனம் எரிச்சல் கோபம் வஞ்சம் மகிழ்ச்சி என அடுக்கடுக்காய் திரைகளை படிமமாக்கி அதற்கு மூச்சுத்திணற செய்கிறீர்கள்;
நேரங்கள் ஓடுகிறது; நாட்கள் ஓடுகிறது; மாதங்கள் ஓடுகிறது; வருடங்கள் ஓடுகிறது என புலம்பிக்கொண்டே அதன் பின் ஓடாதீர்கள்; இவைகள் நிர்ணயிக்கப்பட்டவை; அவற்றை தலைக்கீழாக புரட்டிப்போடும் அதிகாரம் உங்களுக்கு இல்லை; திரும்பிப்பார்க்கும்போது வெகு தொலைவில் நின்றுக்கொண்டிருப்பீர்கள்; கடந்துப்போன அத்துனை சுவை மிகுந்த தருணத்தையும் மலரும் நினைவுகள் என்று மடிந்துப்போகும் வரை ஆதங்கம் கொண்டு அதற்கு புலங்காயிதம் என பெயர் சூட்டிக்கொள்வீர்கள்;
தத்துவங்கள் என்று தனியாக பிறப்பதில்லை; உங்களின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்பட்ட அடியின் சுவைதான் அவை; கடந்துப்போன வயதை வேண்டுமானால் இத்தனை வயதை தாண்டி வந்திருக்கிறேன் என சிரித்துக்கொள்ளலாம்; இனி கடக்கப்போகும் வயது என்னவென்று அறுதியிட்டு சொல்ல முடியுமா; நேசங்கள் நுணுக்கமான சிக்கல்களைக்கொண்டது; நம் அத்துனை எதிர்பார்ப்புகளையும் இன்னொருவரின் மீது சுமத்தி நின்றுக்கொண்டு நேசம் என்கிறோம்; நாம் எப்படி என்பதை கணிக்க தவறிவிட்டு இன்னொருவரை கணிக்க துடிக்கிறோம்; ஆனால் அதுதான் உண்மையும் கூட; நேசம் அப்படிதான் உங்களை பைத்தியமாக்கும்; அதற்கு கடிவாளம் இட முடியாது; எதார்த்தத்தை விளங்கிக்கொள்ளுங்கள்;
உங்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்; உங்களின் எண்ணத்தை எப்படி எனக்கு உகந்ததுப்போல மாற்றியமைக்க முடியும்; அப்படி முடியுமென்றாம் உங்களிடம் இருப்பது என் மூளை என்பதற்கு ஓப்பாகுமே; ஆனால் முடியுமென்கிறது அன்பு நேசம்; குதிரைகளுக்கு வயதாகும்; எல்லா நேரமும் வெற்றிப்பெறக்கூடிய குதிரையென்ற ஒன்று இல்லை; நியதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!
‪#‎Tafara‬ Rasay

12932746_1183453345022116_5301085497481562038_nYasar Arafat

 

 
Leave a comment

Posted by on April 11, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: