RSS

வெற்றியின் வயது

11 Apr

12998702_10206157814532838_5384692945418851917_nவாழ்வில், வெற்றிக்கும் வயதுக்கும் ஏதும் தொடர்பு உண்டா என்று கேட்டால் புன்னகை ஒன்றை பதிலாக தருகிறார் இந்த முதிர்ந்த இளைஞர்.
பக்தவத்சலம் – 30 ஆண்டு கால எனது குடும்ப நண்பர். சென்னை அசோக் நகரில் ரெட்டியார் என்ற சிறப்புப் பெயருடன் உலா வரும் பெரும் தொழிலதிபர். பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் கூட இவரது பங்கில் மட்டும் பெட்ரோல் எப்போதும் தாராளமாக கிடைக்கும். அந்த அளவுக்கு வாடிக்கையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல தொழில்களின் அதிபர். சென்னை நகரின் பெரும்பாலான சாலைகள் மற்றும் ரோடுகள் இவர் கைவண்ணத்தில் உருவானவை.நல்ல சாலை மேம்பாட்டுக்காக தன் உழைப்பை அதிகம் நல்கியவர்.
இந்த வயதிலும் உழைப்பை மட்டும் நம்பி வாழும் பெரியவர்.தனது தொழில் மீது இவர் காட்டும் பக்தி இன்றும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உழைப்பு – உழைப்பு என்றே இவர் இதயம் துடிக்கிறது.
இவரது மகன்களில் ஒருவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வாழ்கிறார். இளைய மகன் கோபி ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசிக்கிறார். கோபி என் மகன் ஆசிக்கின் நண்பன்.77 – ம் வயதில், இன்று அடியெடுத்து வைக்கும் அவரை அவரது தொழிற் கூடத்திலேயே சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்போது அவர் சொன்னார்…
டாக்டர், என் தந்தை சாகும் தருவாயில் என்னை அருகில் அழைத்து அவரிடம் இருந்த வெறும் ஐந்து ரூபாய் நோட்டை என் கைகளில் திணித்து….
“மகனே என்னிடம் உள்ள சொத்தே இவ்வளவு தான்…. இதை வைத்து என் குடும்பத்தை காப்பாற்று” என்று சொல்லி விட்டு கண்ணை மூடி விட்டார்.”
‘அன்றிலிருந்து உழைக்கத் தொடங்கிய என் கரங்கள் இதுவரை உழைப்பை நிறுத்தவில்லை.
ஆனால்…….’ பெரியவர் இடையில் நிறுத்தினார். பின்னர் தொடர்ந்தார்….
“நான் பெரிய தொழிலதிபராக இருந்து என்ன பிரயோஜனம் டாக்டர்….!
தன் மகனின் உயர் நிலையை அருகில் இருந்து கண்டு, ரசித்து, வாழ்த்த என் தாய் தந்தை அருகில் இல்லையே டாக்டர்…..!”
அவர் கண்களில் இருந்து வழிந்த அந்த ஆனந்த கண்ணீரில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்ததை என்னால் உணர முடிந்தது.
அவர் வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ அவரது பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவோம்.

12471526_10205434363007002_3872067841842079744_oVavar F Habibullah

 

 
Leave a comment

Posted by on April 11, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: