RSS

காலம். பொற்காலம் …!

15 Apr

காலம். பொற்காலம் …!

– ராஜா வாவுபிள்ளை

நித்தமும் நித்திரையை விட
கனவுகளையே தாலாட்டாய் தழுவி
தட்டாமாலை ஆடிய இளமைக்காலம்
அது ஒரு கனாக்காலம்
விளையாட்டையே விருப்பமாய்
பள்ளிப்படிப்பை விளையாட்டாய்
விரும்பிக் களித்த வாலிபக் காலம்
அது ஒரு இளவேனிற்காலம்
பணியும் அதன் பளுவும்
குடும்பமும் அதன் கொடுபினையும்
கொண்டு
வளர்ச்சியே முயற்சியாய்
முட்டிமோதிய காலம்
உலகையே கட்டி இழுத்த
குடும்பஷ்த்தனின் காலம்
அது ஒரு முன்பனிக் காலம்
கிடைத்தது போதுமென
இருப்பதை தக்கவைக்க
ததிகிடதோம் ஆடும்
முன்முதுமைக் காலம்
அது ஒரு கார்காலம்
வசந்தகாலம் வந்துவிடுமென
வாழ்வெல்லாம் கழித்திருந்து
வந்தது போதுமென
படைத்தோனை சதாகாலம் பணிந்து
காலன் வரும்வேளையை
பார்த்திருக்கும் காலம் நற்காலம்
அதுவே பொற்காலம்

ராஜா வாவுபிள்ளை1915784_1752216725002117_6437085887224788060_n
 
Leave a comment

Posted by on April 15, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: