RSS

உலக (நிஜ) நாயகர்கள்

21 Apr

Vavar F Habibullah

ஹிட்லரைப் போல் நடிப்பதற்கு ஹாலிவுட்டில் கூட சிறந்த நடிகர்களால் இயலவில்லை.
அவனது நடை, தோற்றம், பேச்சு மற்றும் ஆளுமையை ஒரு நடிகனால் முழுமை படுத்த முடியவில்லை.
1939 முதல் 1945 முடிய உலக அரசியல், அவன் கைகளில் அடங்கிக் கிடந்தது. இரண்டாம் உலகப் போரை முன்னின்று நடத்தி உலக வல்லரசுகளை மிரள வைத்தான் அவன். அவனாலேயே நாடுகள் கூட, நேச நாடுகள்(allied) என்றும், நாச நாடுகள்(Axis) என்றும் இரண்டாக அணி பிரிந்தன.
இத்தாலியின் முசோலினியையும், ஜப்பானின் டோஜோவையும் துணைக்கு வைத்துக் கொண்டு அவன் ஆடிய ஆட்டம் கண்டு உலகத் தலைவர்கள் வாய் பிளந்து நின்றனர்.
இங்கிலாந்தின் சர்ச்சிலையும், அமெரிக்காவின் ரூஸ்வெட்டையும், ரஷ்யாவின் இரும்பு மனிதன் ஜோசப் ஸ்டாலினையும் கண்களில் விரல் விட்டு ஆட்டியவன் ஹிட்லர். இவர்களைத்தான் உலகம் ‘மூன்று பலம் வாய்ந்த நபர்கள்'(the big three) என்று வர்ணித்தது.
உலகப் போரின் ஆரம்ப நாட்களில்.. இங்கிலாந்தின் பிரதமர் சேம்பர்லைனால், ஹிட்லரை தாக்கு பிடிக்க இயலவில்லை.
பதவியை துறந்த அவர் இடத்தை, வின்ஸடன் சர்ச்சிலால் மட்டுமே நிரப்ப முடிந்தது. இதற்கெல்லாம் அஞ்சாத ஹிட்லர், இங்கிலாந்து மீது குண்டுமழை பொழிந்தான். பக்கத்து நாடான போலந்தை ஆக்ரமித்தான்.
செக்கோஸ்லாவோக்கியா சப்தமின்றி பணிந்தது. ஜப்பான் பிரதமர் டோஜோவை தூண்டி விட்டு அமெரிக்காவின் கப்பல்தளம் அமைந்த பியர்ஸ் ஹார்பரை குண்டுமழையால் அழிய வைத்தான். ஹிட்லர் கொடுத்த தைரியத்தில் டோஜோ சைனாவையும் கீழ்திசை நாடுகளையும் ஒரு கை பார்த்தான்.
ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆக்ரமித்த ஹிடலர், பிரான்சையும் விட்டு வைக்கவில்லை. திடீரென்று எதுவும் சொல்லாமலே ரஷயா மீதும் கை வைத் தான். நண்பன் முசோலினியின் கனவுத் திட்டமான ‘ரோமாபுரி சாம்ராஜ்யம்’ அமைய தான் உதவுவதாக வாக்குறுதியும் தந்தான்.
ஹிட்லரைக் கண்டு இங்கிலாந்தின் சர்ச்சில்,
ரஷியாவின் ஜோசப் ஸ்டாலின, அமெரிக்காவின் ரூஸ்வெல்ட், பிரான்சின் சார்லஸ் டிகா லே, சைனாவின் சியாங்கே சேக் ஆகியோர்
மிரண்டு போயினர்.
நாசம் விளைவிக்கும் தலைவர்களை கொன்றொழிக்க நேசத்தலைவர்கள் ஒருங்கிணைந்தனர். இத்தாலியின் முசோலினியை அவன் நாட்டினரே சிறைபிடித்து கொன்றைாழித்தனர். ரஷயப்படைகளால் தோல்விக்கு தள்ள ப்பட்ட ஹிட்லர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான். இந்த நேரம் திடீரென இறந்து விட்ட அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடத்துக்கு ட்ருமேன் தேர்வு செய்யப்பட்டார். ட்ரூமேன் விடவில்லை….
ஜப்பான் மீது – ஹிரோஷிமா – நாகாசாகி நகரங்களில் அணுகுண்டு மழை பொழியச் செய்து ஜப்பானை நிலைகுலையச் செய்தார். ஜப்பான் பிரதமர் டோஜோவுக்கு, நாட்டை தவ றான வழியில் நடத்தி சென்றமைக்காக நாட்டு மக்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நமது நாட்டில் – தேர்தல் களமே போர்க்களமாக காட்சி அளிக்கிறது. தொகுதி பங்கீடு கேட்டு கட்டிப் புரளும் நம் தலைவர்களும், நாடுகளை பங்கு போட எண்ணும் பிற நாட்டு தலைவர் களும் நம் கண் முன் வந்து போகிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில்…..
அமெரிக்காவும், ரஷயாவும் உலக வல்லரசு நாடுகளாக உருவெடுத்தன.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா மற்றும் சைனா இணைந்து ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா மற்றும் சைனா இணைந்து நிரந்தர பாதுகாப்பு கவுன்சிலை(security council) உருவாக்கின.
என்றாலும், போருக்கு பின் ரஷியா தன் எல்லைகளை மேலும் விரிவாக்க முனைந்தது. ஜெர்மனியை இருகூராக்கி கிழக்கு ஜெர்மனியை… தன் கைவசம் வைத்துக் கொண்டது.
போலந்து, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா, ஹங்கேரி, செக்கோஸ்லாவோக்கியா போன்ற நாடுகளை சிதைத்து… இன்றும் தன் கைப்பாவையாகவே வைத்து அதிகாரம் செலுத்தி வருகிறது.
சைனாவில் மாசேதுங்கிற்கு கைகொடுத்த சியாங்கே சேக் அங்கிருந்து தைவானுக்கு அடித்து துரத்தப்பட்டார்.
கொரியாவை கூறு போட்ட ரஷியா, வட கொரியாவை இன்றும் தன் அடிமை நாடாகவே நடத்தி மகிழ்கிறது.

12471526_10205434363007002_3872067841842079744_oVavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on April 21, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: