RSS

உகாண்டாவில் அறிந்திருக்கிறோம்….. வாழ்த்துக் கவிதை

01 May

-வாவர் ரஹீமுல்லாஹ்

அறிந்திருக்கிறோம்…..
தமிழ் அது….
பாடி வரும் பழகி வரும்
பாட்டுக்கு ஆடியும் வருமென்று
தேடி வரும் ஓடி வரும்
தேடுபவரை நாடியும் வருமென்று
எனினும்…
சதிகாரர் எனவறிந்தால்
வாடி விடாது
வாளெடுத்து சாடி வரும்
சமரத்தில்
வெட்டிய தலைகளை
எட்டி உதைக்கும் என்றும்
படித்தாலே மனதில் பூ பூக்குமென்றும்
படித்த வாய் மணக்குமென்றும்
எல்லாமும் எப்படித்தான்
யார் யார் வாய் கேட்டறிந்தாலும்
அது…. கடல் காடு மலையெல்லாம் தாண்டி
பறந்தோடி இங்கேயும் வருமென்று இன்றுதான் அறிகிறோம் !
இனியும் சொல்வேன்…..
தமிழ் அது….
குழந்தை போல் கொஞ்சி வரும்
தென்றல் போல் குளிர்ந்து வரும்
தோழமை போல் பாய்ந்து வரும்
மனதில் கொண்டவள் போல் தாவியும் வருமென்று
ஆயினும்….
இன்றே அறிகிறோம்
அது வான் நிலவாய் வட்டமிட்டு
பௌர்ணமியாய் அழகெடுத்து
வாழ்த்துப்பா பாட எங்கள் முற்றத்துக்கே வருமென்று !
தமிழ் அது….
காளையர் தோளை வலுவாக்கும்
கன்னியர் மனதில் காதல் வளர்க்கும்
போர்களத்தில் வெற்றிப் பூ சொரியும்
மாலைமதி நேரம்
சற்றே குழைத்தும் இழைத்தும் காதில் சொன்னால்….
மங்கை இல்லாளை
இல்லாதது இனி இல்லை என
நம் எண்ணம் போல் கூற வைக்கும்
சந்தணப் பேழையாய் வாசம் காட்டும்
பாச நேசத்தில் நம்மை வீழ்த்தவும் செய்யும் !
ஆயின் இது காலைப் பொழுது என்பதால்
அக்காலை நம் தாயின் கருவறையில்
நாம் கேட்ட தேன்மொழி அள்ளி வந்து
தன் கருத்தில் அதை கலந்து சுவையாக்கி
இன்பத் தமிழில் எடுத்துச் சொல்ல
இக்காலையில் இங்கே வந்திருக்கும் நம் தமிழக்கா…..!
ஆம்
அம்மாக்கள் எல்லாம் சும்மாக்கள்
என்றான தீதில்
அண்ணிகள் என்போர்
ஒட்டுண்ணிகளாக மாறிய கேடில்
பக்காவான பாசத் தமிழில்
யக்கோவ்…..என மண் வாசத்தோடு
தமிழ் பாசத்தின்
நேசத்தையும் அதில் குழைத்து
நம்மை நாடி வந்தவரை
நாம் போற்றுவோம்
அத்தோடு
வாழும் மண்ணையும்
பேசும் மொழியையும்
பேணிக் காத்திடவே
உயிர் தமிழுக்கு
உடல் மண்ணுக்கு என்கிற
நம் இனமான மந்திரத்தை
இன்நன்நாளிலும்
நாமெல்லாம் மீண்டும்
நினைவில் கொள்வோம் !!

இன்றைக்கு நடந்த தமிழ் சங்க விழாவின் போது தமிழுக்கும் வந்திருந்த விருந்தினருக்கும் சேர்த்து ஒரு வாழ்த்துக் கவிதை

13087641_740982306044481_7572891155743247575_n

வாவர் ரஹீமுல்லாஹ், தமிழ் சங்கம், உகாண்டா

Raheemullah Mohamed Vavar
 
Leave a comment

Posted by on May 1, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: