RSS

என்ன ஒரு சுவாரசியமான தேர்தல் களமாய் அந்தக் காலம் அமைந்திருந்தது …

07 May

13103340_1703140813273546_8001140474060242265_n

தேர்தல் களம்
சட்டமன்ற பாராளுமன்ற
பழங்கால நினைவலைகள் ….
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ….
ஞாபகச் சாலையில் சில நிமிடங்கள் பயணிப்போம் …
விரல் விட்டு எண்ணும் கட்சிகளின் எண்ணிக்கை …அவரவர் கட்சிகளுக்கு சிறியளவில் பந்தலிட்டு கேம்புகள் போடப்பட்டிருக்கும் …
சுவரொட்டிகள் ஒட்டுவதும் கொடிகள் கட்டுவதும் காலையிலிருந்து மாலை வரையிலும் சாயா வடை கிழங்கு சுக்குக் காப்பி சுவைத்த அருந்திய சுகமான அனுபவங்கள் ….
வேட்பாளர்கள் வீடு வீடாகவும் ஜங்ஷன்களிலும் நின்று வாக்குகள் சேகரிக்க பிரச்சாரங்கள் ….
கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டங்களுக்கு ஆத்மார்த்த மனசோடும் ஆர்வத்தோடும் தொண்டர்கள் கலந்திட்டனர் ….
தமது கட்சிகளின் திட்டங்களை எடுத்துரைத்து பிற கட்சிகளின் செயல்களை நாகரீகமான சொல்லாடலில் தாக்கிய தலைவர்களின் பேச்சுகள் …
மிஞ்சும் இலக்கியமும் இலக்கணமும் முத்தமிட்டு கொஞ்சும் தமிழில் பிரச்சாரங்கள் …
தேர்தல் நாளன்று கட்சிகளின் கார்கள் வாக்காளர்களை ஏற்றி அந்தந்த தெருக்களின் கட்சி சார்ந்த வீடுகளில் இறக்கி விட்டு அமரச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லுதல் ….
பாரபட்சமற்ற நியாயமான செயல்பாடுகளில் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்புகள் ….
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை …
பெரிய ஆட்களோடு சின்னப் பையன்கள் உற்சாகத்தோடு டிரான்ஸிஸ்டர் ரேடியோ செய்திகளை கேட்க வீட்டுத் திண்ணைகளில் ஒன்று கூடுதல் ….
நேரம் நெருங்கியதும் ஆக்காசாவாணி செய்திகள் வாசிப்பது …
வணக்கம் சென்னை வானொலி நிலையம் தேர்தல் முடிகள் ….
எண்ணிக் கொண்டிருக்கும் 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் ….
சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விடவும் இவர் பின் தங்கியிருக்கிறார் …
சென்னை திருச்சி மதுரை நெல்லை குமரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர் ….
அடுத்த தேர்தல் முடிவு செய்திகள் மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாகும் ….
என்ன ஒரு சுவாரசியமான தேர்தல் களமாய் அந்தக் காலம் அமைந்திருந்தது …
ஆனால் இன்றைய தேர்தல் களமோ ………….
பேரன்புடன்
Abdul Gafoor

அப்துல் கபூர்

 
Leave a comment

Posted by on May 7, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: