RSS

வாழ்வில் மகிழ்ச்சியாய் …..

09 May

நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாய் மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்; புன்னகைத்தப்படி மட்டும் இருக்க நீங்கள் என்ன செய்துவைத்த பொம்மைகளா; வாழ்வில் உண்டாகும் கசப்புகளும் காயங்களும்தான் உங்களுக்கு இனிப்புகளின் அருமையையும், மருந்தின் நலத்தையும் அறியவைக்க முடியும்;
சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு பின்னப்பட்ட சிலந்திவலைகள் போல; உங்களுக்கு புரியாதென்பதால் அவைகளை பொய்யென்று புறம் தள்ளிவிடமுடியாது; நேசித்தவர்கள் மட்டுமே உங்களின் கோபங்களையும் மகிழ்ச்சியையும் புறந்தள்ள மாட்டார்கள்; இரவு நேரங்களில் தனிமையில் அழுதவர்களுக்கு பகலில் எல்லோர் முன்னிலையிலும் அழுவதின் வெட்கம் பற்றி உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை;
அமைதியும் மெளனமும் ஒர் அற்புதமான ஆயுதம்; அவற்றால் அறுக்க முடியும்; கனிகளையா சருமத்தையா என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்கின்றன; உங்களை பிடித்தவர்கள் இருப்பதுப்போல பிடிக்காதவர்களும் இருக்கதான் செய்வார்கள்; அதற்காக மாய்ந்துக்கொள்ளாதீர்கள்; நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாய் மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்; புன்னகைத்தப்படி மட்டும் இருக்க நீங்கள் என்ன செய்துவைத்த பொம்மைகளா!
‪#‎Tafara‬ Rasay

13133093_1206106356090148_5629372828111766662_n
Yasar Arafat
 
Leave a comment

Posted by on May 9, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: