RSS

என் உம்மாவின் நினைவாக…./அபூ ஹாஷிமா

10 May

13151534_1020433758035353_3805614079945652340_n

என் உம்மாவின் நினைவாக….
எனக்கு பத்து வயதாக இருக்கும்போதே விளையாட்டில் நிறைய ஆர்வம் வந்து விட்டது.
என் பெரியம்மா மகன் அண்ணன் ஜமால்தான் எனக்கு குரு.
அவன்தான் எனக்கு விளையாட்டு கற்றுத் தந்தான்.
விளையாட்டென்றால் …
பார் விளையாடுவது
கர்லா கட்டை சுற்றுவது
பளு தூக்குவது போன்றவை.
நல்ல விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் …
அண்ணன் ஜமால் அவன் அண்ணன் அமானுடனும் நண்பர்களுடனும் கன்னியாகுமரி கடலுக்கு குளிக்கப்போனான்.
மாலை நேரம் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது பெரிய அலையொன்றில் சிக்கிக் கொண்டான் .
கடல் இழுத்துச் சென்றுவிட்டது.
மறுநாள் உடல்தான் கரை ஒதுங்கியது.
வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் மரண அதிர்ச்சி அதுதான்.
அதன் பிறகு ஒரு வேகத்தோடு அவன் கற்றுத் தந்த விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போது உடல் கட்டுமஸ்தாய் மெருகேறியது.
காலையிலும் மாலையிலும் கடுமையான பயிற்சி செய்தேன்.
அப்போது எங்கள் வீட்டில் மாடுகளும் வளர்த்தார்கள்.
மாடுகளுக்கு கொடுக்க பருத்திக்கொட்டை அரைத்து பால் கொடுப்பார்கள்.
எனக்கும் அதில் ஒரு கப் பால் கிடைக்கும்.
அதுபோக ஊற வைத்த கொண்டைக் கடலை , ருசியான தேங்காய் புண்ணாக்கு எல்லாம் சாப்பிடுவேன்.
அதாவது …
மாடுமாதிரி .
அதுபோக பச்சை காய் கறிகள் , முட்டை ஹார்லிக்ஸ் எல்லாம் இஷ்டம்போல் கிடைக்கும்.
இத்தனையையும் பக்குவப்படுத்தி எனக்குத் தந்தது ?
வேறு யார் ..
என் உம்மாதான்.
நான் மீன் சாப்பிடமாட்டேன் .
கோழி சாப்பிடமாட்டேன்.
அதற்காக காய் கறிகளை விதவிதமாக கறிவைத்து எனக்குத் தருவார்கள்.
உம்மாக்கு என் மேல் மிகுந்த பாசம்.
உம்மா சொல்லும் எல்லா வேலைகளையும் நான் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பேன்.
எங்க வீட்டுத் தடியன் நான்தான்.
இந்த விளையாட்டு காலேஜில் படிக்கும்போதும் தொடர்ந்தது.
மதுரை யூனிவர்சிட்டியில் விளையாடி பரிசோடு வரும்போது
உம்மாவும் வாப்பாவும் அவ்வளவு சந்தோஷப்படுவார்கள்.
சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமும் செய்து வைத்து சந்தோஷப்பட்டார்கள்.
உம்மா ஒரு சீதேவி.
பசித்தோரின் முகம் பார்த்தே பசிபோக்கும் இரக்க சுபாவி.
உம்மாவைப் பற்றி நிறைய சொல்லலாம்.
ஆனால் …
உம்மாவைப் பற்றி சொல்லும்போதே
உம்மாவின் மரணம்தான் என் கண்முன்னால் வந்து நிற்கும்.
உடல் நலிவுற்று உம்மா பட்ட வேதனையும் மரணமும் …
உம்மா இனி வரமாட்டா என்ற உண்மை முகத்தில் அறைந்த போது நான் துடித்துவிட்டேன்.
அழுகை நெஞ்சை அடைக்க செய்வதறியாமல் ஆறுதல் கொள்ள முடியாமல் நான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து அழுகையை அடக்கினேன்.
சிகரெட் முடிந்து வீசி எறிந்தபோது முதுகில் ஆதரவாய் ஒரு கரம் தடவிக் கொடுத்தது.
திரும்பிப் பார்த்தேன்….
என் மூத்த அண்ணன் டாக்டர் ஹபிபுல்லாஹ் . ஆறுதலாய் கட்டிக் கொண்டார்.
அதுவரை நான் சிகரெட் குடிப்பது அண்ணனுக்குத் தெரியாது.
வெளிநாட்டில் இருந்தபோதும் வெளியே இருந்தபோதும் பல சமயங்களில்
உம்மாவை நினைக்காமல் இருந்திருக்கிறேன்.
உம்மாவை சந்தூக்கில் வைத்து தூக்கிச் சென்றதற்குப் பிறகு
உம்மாவின் நினைவுகளை சுமந்துகொண்டே இருக்கிறேன்.
ஒரு நாளாவது உம்மாவுக்கு துஆ செய்ய மறந்தது கிடையாது.
உம்மாவின் அடக்கத்தலத்தை திரும்பிப் பார்த்து சலாம் சொல்லாமல் போன நாள் கிடையாது.
இறைவா …
என் உம்மாவுக்கும்
வாப்பாவுக்கும்
உன் அருள் கொண்டு
கருணை நிழல் கொடு
பாவங்களை
உன் இரக்கம் கொண்டு
துடைத்திடு
மலர்ச் சோலையாய்
மண்ணறையை
மலர விடு
மறுமை சுவனத்தை
உன் அளவற்ற அன்பால்
வழங்கிடு !
நீ அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் !
உன் பேரருளால்
என் நண்பர்கள் அத்தனைபேர் பெற்றோருக்கும்
நீ அருள் செய் ரஹ்மானே !

10891931_919890858030583_7334972593129223123_n
Abu Haashima
Advertisements
 
Leave a comment

Posted by on May 10, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: