RSS

வயல் வரப்புகளும்

25 May

12705549_1674219609499000_4107770838228843719_n
வயிறு பரப்புகளும் ….
வளமுற்ற மண்ணில்
கலப்பை தூக்கி
நாற்றுகளை நாட்டி
களைப்பை நீக்கி
களிப்பை மூட்டி …
ஏறுதனை பூட்டி
உழுது பயிரிட்டு
சேறுதனை மிதித்து
அறுவடை நெல்லெடுத்து
சோறுதனை பொங்கிட …
நெற்க் கதிர்களை
சுமந்திடும் பாரமோ
தலையினை தாக்க
சூரியக் கதிர்கள்
எறிந்திடும் வெப்பமோ
உடம்பினை தாக்க …
புயல் வேகத்தில்
சிந்தனைகள் உழன்றிட
கயல் விழிகளில்
ஏக்கங்கள் நிழலாட
வயல் வழிகளில்
கட்டுகளோடு நடந்திடும்
தமிழினப் பெண்கள் ….
தூக்குச் சட்டிகளில்
பழைய சோறும்
தொட்டுக்க ஊறுகாயும்
வயற் காற்றின்
தாலாட்டில் உண்டது
விவசாயினருக்கு மறந்திடுமா …
தெருக்களில் மாடடித்து
வட்டமாய் சுழன்று
நெல்லுதிர சூடடித்து
வளைந்து விளைந்த
போகங்களுக்கு நெல்லளந்து
சாக்கிலடைத்த காலங்களும்
நமதூராருக்கு மறந்திடுமா ….
அயலோரம் உழைத்தாலும்
வயிற்றுக்கு சோறிட
வயலோரம் உழைத்து
விவசாயம் பெருக்குவது
உன்னத உழைப்பன்றோ ….
அப்துல் கபூர்
11.02.2016 …
படம் உதவியளித்த
அன்பு நண்பர்
ஜாபர் அலிக்கு நன்றி ….

13220888_1709344362653191_2517005423436946583_n

Abdul Gafoor

 
Leave a comment

Posted by on May 25, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: