RSS

Monthly Archives: June 2016

சந்தையும் மந்தையும் ….!

சாதரணமாக சந்தை என்றால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஓரிடத்தில் கொண்டுவந்து வைத்து விற்பனை செய்துவிட்டு அதே இடத்தில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் இடமாகவே இருந்தது, ஒரு 40 வருடங்களுக்கு முன்னர் வரையிலும்.
அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்தே பின்னிப் பிணையப்பட்டு இருந்தது. விவசாய விளைபொருட்களுக்கு நேரடியாக நுகர்வோருடன் தொடர்பு இருந்தது.
விவசாயியும் கால்நடைகளும் பிரிக்க முடியாத உறவுகளாய் இருந்தது. கால்நடைகளும் மந்தை மந்தையாக சந்தைக்கு ஓட்டிவந்து வாங்கவும் விற்கவும் செய்தனர். Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on June 8, 2016 in 1

 

தமிழ்காப்புத் தொல்காப்பியம்

தொல்காப்பியா தொல்காப்பியா
உன் தொடர்பு எல்லைக்குள்தான்
இன்னமும் நாங்கள்
தொங்கிக்கொண்டிருக்கிறோம்
தொல்காப்பியா

தொலைந்தேபோய்
தமிழை இன்னும்
இழந்தே விடவில்லை
தொல்காப்பியா

தொல்காப்பியா
தொல்காப்பியா என்கிறாயே
அது நல்காப்பியா
புரூக்பாண்ட் புரூகாப்பியா
அல்லது
போட்டோக்காப்பியா
என்றே வினவும்
நொள்ளைத் தமிழரும்
இன்று இல்லாமலில்லை
தொல்காப்பியா Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on June 8, 2016 in 1

 

அருட்கொடை விரிந்த மாதம்

Nagore Kavi

13332924_1723854674528977_7903197413562047681_nஅருட்கொடை விரிந்த மாதம்
அருட்குடை விரித்த மாதம்
ஸஹரினில் எழுப்பும் மாதம்
ஸகரினைப் பூட்டும் மாதம்
உம்ராவையும் ஹஜ்ஜாய் மாற்றும்
உயர்வான ரமலான் மாதம்…
ஏழைவரியை ஏய்த்திடாமல்
ரமலான் மாதம் வழங்கச் சொல்லும்
பொருளிருந்தும் பூட்டி வைத்தால்
பொருட்படுத்தாமல் வழக்கைச் சொல்லும்
இரவுத் தொழுகை தொழவும் வைக்கும்
இறைவனிடத்தில் விழவும் வைக்கும்
தவ்பா கேட்டு அழவும் வைக்கும் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on June 6, 2016 in 1

 

On that ground, I can divorce you!

Charu hasanஎண்பத்தைந்து வயதில் தமிழில் முதல் நூலை எழுதுவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது. கதை விடுவதற்கு சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது. எண்பது ஆண்டு அனுபவம் கை கொடுக்கும். இரண்டாவதாக நாம் சொல்லும் கதைகளை வாசகர்கள் நம்பிதான் ஆகவேண்டும். சர்ச்சைகளை மறுத்துப் பேச நினைப்பவர்கள் ஏற்கனவே மரணித்து இருப்பார்கள்.

இதனால்தான் சாருஹாசன் இத்தனை ஆண்டுகளாக நூல்வெளியிடாமல் காத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்டோ பயோகிராபியான ‘அழியாத கோலங்கள்’ அதகளமென்றுதான் சொல்ல வேண்டும். யாரையுமே விட்டுவைக்கவில்லை. போட்டுத் தாக்கி விட்டு போய்க்கொண்டே இருக்கிறார். தமிழின் முக்கியமான தன்வரலாற்று நூல்களில் இதையும் ஒன்றாக தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on June 2, 2016 in 1

 

கண்ணயர்ந்து போனேன்

13321944_891246011001660_6819150373145413719_n

கண்ணயர்ந்து போனேன்
கண நேரத்தில்
காட்சிகளின் ஓட்டம்
ஒவ்வொன்றாய் அங்கு
ஓடிடும் நீரோடையில்
துள்ளிக் குதித்திடும்
மீன்களென்ன
தாகம் தணிக்க நீரருந்தும்
மான்களென்ன
ஓய்ந்து களைத்த
விவசாயி
சற்றே ஓய்வெடுக்க
நிழல் தேடி அலைகிறான் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on June 1, 2016 in 1