RSS

சந்தையும் மந்தையும் ….!

08 Jun

சாதரணமாக சந்தை என்றால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஓரிடத்தில் கொண்டுவந்து வைத்து விற்பனை செய்துவிட்டு அதே இடத்தில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் இடமாகவே இருந்தது, ஒரு 40 வருடங்களுக்கு முன்னர் வரையிலும்.
அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்தே பின்னிப் பிணையப்பட்டு இருந்தது. விவசாய விளைபொருட்களுக்கு நேரடியாக நுகர்வோருடன் தொடர்பு இருந்தது.
விவசாயியும் கால்நடைகளும் பிரிக்க முடியாத உறவுகளாய் இருந்தது. கால்நடைகளும் மந்தை மந்தையாக சந்தைக்கு ஓட்டிவந்து வாங்கவும் விற்கவும் செய்தனர்.
பொருட்களின் தேவையும் அதன் வரத்துமே விலையை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்தாலும் பேரம்பேசி வாங்குவோரும் விற்போரும் மனநிறைவுடன் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொருள் சிறப்பானதாகவும் தரமானதாகவும் விளைவிக்கப் பட்டது. அப்பொருட்களின் தரமே அதன் சந்தையை நுகர்வோரால் வாய்வழியாக பரப்பப்பட்டு உருவாக்கிக் கொண்டது எந்தவிதமான செலவும் இல்லாமலேயே. மேலும் அதற்கென்று நல்ல சந்தையும் தொன்றுதொட்டே இருந்து வந்தது.
இப்போது நடப்பது என்ன?
ஊடகங்கள் வழியே மூளைச் சலவை செய்யப்பட்ட மக்களை மந்தை மந்தையாக ஆடம்பர வணிக வளாகங்களுக்கு வருவித்து பளபளக்கும் கண்கவர் வகையில் பொதிந்து வைத்து விலைப்பட்டியலைக் காட்டி பேரம் பேசுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்கப் படாமல் பொருட்கள் நுகர்வோர்களான மக்களின் தலையில் வைத்து கட்டப்படுகிறது. அவர்களும் நானும் வாங்கிவிட்டேன் என்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர்.
மக்களுக்கேற்ற சந்தை என்பதை மாற்றி சந்தைக்கேற்ற மக்களாக மாற்றியமைத்த பெருவணிக நிறுவனங்களும் ஊடகங்களும் மமதையில் சிரிக்கின்றனர். அன்றாடம் காய்ச்சிகளாக இருந்த விவசாயிகள் கொத்துக் கொத்தாக மரிக்கின்றனர்.
எண்ண ஓட்டம் ….!
தொடரலாம்.

1915784_1752216725002117_6437085887224788060_nராஜா வாவுபிள்ளை
 
Leave a comment

Posted by on June 8, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: