RSS

Monthly Archives: July 2016

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்

மாறி வரும் சமூக சூழலில் அன்பு என்பது கவிதைப் பொருள் ஆகிவிட்டது. அன்பு இல்லாதவர்களால் அன்பை வாரி வழங்க இயலாது. ஆனால் அன்புக்கும், பாசத்திற்கும், நல்ல நட்புக்கும் எடுத்துக் காட்டாக விளங்கி வரும் நண்பர் பாலசுந்தரம் என்ற பாலாஜி சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பிரபல தொழிலதிபர்.
பல நீண்ட வருடங்களாக என் குடும்ப நண்பராக திகழும் சைதை பாலாஜியின் கதை சற்று விசித்திரமானது.
1970 களில் கொக்கோ கோலா மற்றும் காம்போ கோலா நிறுவனங்களில் மிகவும் சாதாரண பணியில் அமர்ந்த இவர் அரசின் அன்றைய கொள்கைகளினால் கம்பெனி மூடபட்டபோது வேலை இழந்து தவித்தார். படித்த இவரை நிறுவனம் ஒரு கால கட்டத்தில் புல் வெட்டும் பணியினை மேற்கொள்ள வற்புறுத் தியது. அந்த பணியை செய்ய மறுத்த இவரை நிர்வாகம் வேலையில் இருந்தும் தூக்கி எறிந்தது.
கையில் ஐநூறு ரூபாய் பணத்துடன் வெளியேறிய இவர் சைதாபேட்டையில் பாலாஜி சைக்கிள் மார்ட் என்ற சைக்கிள் விற்பனை நிலையத்தை சிறு அளவில் துவங்கினார். நாளாக – நாளாக இவர் நிறுவனம் ஆல்போல் தழைத்து விரிந்து, பரந்து வளர்ந்தது.சென்னை நகரின் நாலா புறமும் இவரது நிறுவனம் கிளைகளை பரப்பின. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 31, 2016 in 1

 

அவள் பெயரென்ன எனக்கு தெரியாதே

பல்லவி :
அவள் பெயரென்ன எனக்கு தெரியாதே
அவள் ஊரென்ன அதுவும் தெரியாதே
சாலையில் பார்த்த கண்ணாலே
நான் காதலில் விழுந்தேனே
பூவும் அவள்போல் அழகில்லை
வீசும் தென்றலும் அவள்போல் குளிரில்லை
கூந்தலின் வாசம் நுகர்ந்த பின்னே
நானே மறைந்தேனே
தேவதையே தேவதையே நீ யாரென்று
நின்று சொல்லிவிடு
புன்னகையை அம்பாக நீ வீசுவதை
நிறுத்திவிடு Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 31, 2016 in 1

 

என் அவள் ….!

பெண்ணை பார்த்தால்
தாயை தான் கண்டேன்
உன்னை பார்க்கும்வரை
உன்னப் பார்த்தேன்
அழகின் அர்த்தம்
புரிந்தது
உன் பேச்சில்
இசையை உணர்ந்தேன்
உன் பார்வையில்
பாசத்தைப் பார்த்தேன்
உன் பழக்கத்தில்
பரிவைக் கண்டேன்
உன் நெருக்கத்தில்
ஆண்மை விழிக்கக்
கண்டேன்
உன்னைக் கண்டபின்
என்னையே கண்டேன்.

11072012_1651954148361709_5127342093962522924_nராஜா வாவுபிள்ளை
 
Leave a comment

Posted by on July 31, 2016 in 1

 

மௌனம்….!

உள்மனதின் உளைச்சல்களின்
வார்த்தைகள் இல்லாத
உண்மை மொழி

விளங்காத வார்த்தைகளால்
விவாதிக்க விரும்பாத
விருப்பு நிலை

கொந்தளிக்கும் மனதை
குளிர வைக்கும்
பனிக் கட்டி

கூசாமல் பேசுவோரை
அமைதி காத்து
குழப்பிவிடும் யுக்தி Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 20, 2016 in 1

 

பாட்டெடுத்து வாரேன் பொண்ணே

13781968_920250008101260_6048265466868253638_n

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

என்றும் உங்கள் வாழ்த்துக்களுடன் நான்…

நான் எழுதி வெற்றிப்பெற்ற பாடல் இது…

பல்லவி :
ஆண் : பாட்டெடுத்து வாரேன் பொண்ணே
பாட்டின் கரு நீதான் கண்ணே
மாமன் மகளே என் மரிக்கொழுந்தே

பெண் : கஞ்சித்தண்ணி தலையில் சொமந்து
வரப்பின் மேலே பாதம் பதித்து
ஊட்டி தாரேன் ஆசை மச்சான்….. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 20, 2016 in 1

 

பசுமையின் கூடல் …

by Abdul Gafoor

13699972_1733159870271640_3621103642328459092_n

வானின் தூரத்தை
மானின் வேகத்தில்
தொடர ஆசைப்பட்டு
மேகங்களை உரசும்
மலைத் தொடர் ….
நீண்ட தென்னைகளின்
நெருங்கிய கீற்றதில்
உறக்கம் கலைந்து
மீண்ட காற்றது
காத்திருக்கும் தேகங்களை
தீண்ட புறப்படுது ….
உளத்தை மயக்கும்
பசுமையின் பிம்பம்
குளத்தை சூழ்ந்து
கொஞ்சும் குமரியின்
வளத்தை தாலாட்டுது …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 18, 2016 in 1

 

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி

முன்குறிப்பு: வான(ப்பயண)த்தில் பறந்துகொண்டிருந்தபோது, நண்பர் வினவினார் இப்படி: “எத்தனையோ நல்ல புத்தகங்கள்; கருத்துகளைப் படிக்கிறோம், கிரகிக்கிறோம், குறிப்புகளையும் எடுத்துவைக்கிறோம். இருந்தும் நீண்ட காலத்துக்கு அவை நினைவில் தங்குவதில்லையே, என்ன செய்வது?”

இந்த நண்பர் வெளிப்படுத்திவிட்டாலும், இன்னும் நிறையபேருக்கு இந்த வினா ‘உள்’ளே இருக்கத்தான் செய்கிறது.

என்ன சொல்வது? சற்றே யோசித்தேன்.

பள்ளிப் பருவ நுட்பம் ஒன்று நினைவிலாட……

“நாம் படித்ததை; அறிந்ததை; குறித்துக்கொண்டதை, நமது மொழியில்; நமது சொற்களில் நாமாக எழுதிப் பார்க்க வேண்டும், மறக்காமலிருக்க அது உதவும்” என்றேன். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on July 12, 2016 in 1