RSS

புதியது….!

04 Jul

புதியது என்று எதுவுமில்லை.
நமக்கு இன்று புதியதாக தெரியும் பலவும் நமது மூத்தவர்களுக்கு பழையதாகவோ பழகியதாகவோத்தான் இருக்கும்.இரவும் பகலும் இன்னும் பலவும் மாறிமாறி வந்துகொண்டேதான் இருக்கும்.
‘There is nothing new under the Sun’ என்று சொல்வதுகூட புதிதல்ல சூரியன் தோன்றிய காலத்திலி இருந்தே சொல்லப்படுவதுதான்.
பள்ளிக்கூடத்தில் புதிய வகுப்பில் பழைய வாத்தியார் பாடம் எடுக்கும்போது கழிந்தவருடம் அதேபாடத்தை எடுக்கும் போது சொன்ன அதே கதையைத்தான் திரும்பவும் சொல்கிறார்கள். நான் ஒரு வகுப்பிலும் இரண்டு வருடம் படித்ததில்லை. உடன்படித்த முன்னாள் மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பள்ளிசென்று புதிய பாடங்கள் படிப்பது அவசியமே என்றாலும் குடும்ப பாடங்களை சந்ததியினருக்கு படித்துக் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு தாய் தந்தைக்கும் முக்கியமான கடமையாகும்.
முக்கியமாக, இளவயதில் ஆரோக்யமும் ஆற்றலும் அதிகமாகவே இருக்கும் ஆனால் பருவம் மாறும் ஒவ்வொரு பருவத்திலும் வரும் வாழ்வியல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை நாம் கடந்தே வந்திருக்கிறோம்.
நமது சந்ததியினருக்கும் அந்ததந்த பருவத்தில் நாம் சந்தித்த அதேமாதிரியான பிரச்சினைகள் வருவது மிகவும் சாத்தியம். அதை முன்னரே அவர்களுக்கு தெரிவித்திருந்தால் அவர்கள் வருமுன் காத்துக்கொள்ளலாம். திடீர் மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சி அடைவதையும் தடுக்கலாம்.
வரும்முன் காப்பதே நலம்.
சரித்திரமும்கூட திரும்பும்போது வாழ்வின் நிகழ்ச்சிகளும் குணநலன்களும் நோய்நொடுகளும் வருங்கால சந்ததியினருக்கும் திரும்பவும் வரலாமென தெரிந்திருந்தும் தெரிந்ததை அவர்களோடு பகிராமல் இருப்பது எப்படி நியாயமாகும் ?
எண்ண ஓட்டம் ….!
தொடரலாம்.

11072012_1651954148361709_5127342093962522924_n

ராஜா வாவுபிள்ளை

 
Leave a comment

Posted by on July 4, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: