RSS

பசுமையின் கூடல் …

18 Jul

by Abdul Gafoor

13699972_1733159870271640_3621103642328459092_n

வானின் தூரத்தை
மானின் வேகத்தில்
தொடர ஆசைப்பட்டு
மேகங்களை உரசும்
மலைத் தொடர் ….
நீண்ட தென்னைகளின்
நெருங்கிய கீற்றதில்
உறக்கம் கலைந்து
மீண்ட காற்றது
காத்திருக்கும் தேகங்களை
தீண்ட புறப்படுது ….
உளத்தை மயக்கும்
பசுமையின் பிம்பம்
குளத்தை சூழ்ந்து
கொஞ்சும் குமரியின்
வளத்தை தாலாட்டுது ….
மணியாய் உருளும்
நீரலையின் அரவணைப்பில்
அணியாய் உலவும்
இலைகளின் ஊர்வலம்
காண்போரை கவருது ….
அழகு துஞ்சும்
கன்னியாக்குமரியின்
சுவை கூடும்
இயற்கையின் ஊடலை
எவை மிஞ்சும் ….
அப்துல் கபூர்
….
படம் உதவி …
சிந்தனைப் புயலும்
புகைப்பட கலைஞனுமான
முகநூல் நண்பன்
அன்பிற்குரிய
எனது Bhuvan
கற்பனையை தூண்டியமைக்கு
உளமார்ந்த நன்றி …..

Abdul GafoorAbdul Gafoor
Advertisements
 
Leave a comment

Posted by on July 18, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: