RSS

பாட்டெடுத்து வாரேன் பொண்ணே

20 Jul

13781968_920250008101260_6048265466868253638_n

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

என்றும் உங்கள் வாழ்த்துக்களுடன் நான்…

நான் எழுதி வெற்றிப்பெற்ற பாடல் இது…

பல்லவி :
ஆண் : பாட்டெடுத்து வாரேன் பொண்ணே
பாட்டின் கரு நீதான் கண்ணே
மாமன் மகளே என் மரிக்கொழுந்தே

பெண் : கஞ்சித்தண்ணி தலையில் சொமந்து
வரப்பின் மேலே பாதம் பதித்து
ஊட்டி தாரேன் ஆசை மச்சான்…..

சரணம் 1
ஆண் : உன்னழக பார்த்துக் கொண்டால்
சோறுதண்ணி வேண்டாம் புள்ள
தொண்டை காயும் நேரம் பார்த்து
பக்கம் நீயும் வாயேன் புள்ள
மரிக்கொழுந்தே

பெண் : மஞ்சத்தாலி கட்டிப்புடு உன் மடியில்
நானும் விழுந்துடுறேன்
ஒருமுழம் மல்லிப்பூவில் மொத்தத்தையும்
எழுதி தாரேன் ஆசை மச்சான்…

பல்லவி : ….

சரணம் 2

ஆண் : குச்சி கட்டிய நாள்முதலாய்
மனசுக்குள்ளே கோட்டையதான்
கட்டிருக்கேன்
வாடிபுள்ள வாழ்ந்திடுவோம்
மரிக்கொழுந்தே ஏ..ஏ மரிக்கொழுந்தே

பெண் : கோட்டையொன்னும் தேவையில்லை
நீ கட்டிய பச்சவோலை காத்திருக்கு
கூரை கட்டி போடு மச்சான்
நம்ம வாழ அதுவும் போதும் மச்சான்
ஏ..ஏ…ஏ ஆசை மச்சான்….

பல்லவி : …….

என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.

12804753_835493073243621_8747970568008875017_n

என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

:

 

 

 
Leave a comment

Posted by on July 20, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: