RSS

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்

31 Jul

மாறி வரும் சமூக சூழலில் அன்பு என்பது கவிதைப் பொருள் ஆகிவிட்டது. அன்பு இல்லாதவர்களால் அன்பை வாரி வழங்க இயலாது. ஆனால் அன்புக்கும், பாசத்திற்கும், நல்ல நட்புக்கும் எடுத்துக் காட்டாக விளங்கி வரும் நண்பர் பாலசுந்தரம் என்ற பாலாஜி சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பிரபல தொழிலதிபர்.
பல நீண்ட வருடங்களாக என் குடும்ப நண்பராக திகழும் சைதை பாலாஜியின் கதை சற்று விசித்திரமானது.
1970 களில் கொக்கோ கோலா மற்றும் காம்போ கோலா நிறுவனங்களில் மிகவும் சாதாரண பணியில் அமர்ந்த இவர் அரசின் அன்றைய கொள்கைகளினால் கம்பெனி மூடபட்டபோது வேலை இழந்து தவித்தார். படித்த இவரை நிறுவனம் ஒரு கால கட்டத்தில் புல் வெட்டும் பணியினை மேற்கொள்ள வற்புறுத் தியது. அந்த பணியை செய்ய மறுத்த இவரை நிர்வாகம் வேலையில் இருந்தும் தூக்கி எறிந்தது.
கையில் ஐநூறு ரூபாய் பணத்துடன் வெளியேறிய இவர் சைதாபேட்டையில் பாலாஜி சைக்கிள் மார்ட் என்ற சைக்கிள் விற்பனை நிலையத்தை சிறு அளவில் துவங்கினார். நாளாக – நாளாக இவர் நிறுவனம் ஆல்போல் தழைத்து விரிந்து, பரந்து வளர்ந்தது.சென்னை நகரின் நாலா புறமும் இவரது நிறுவனம் கிளைகளை பரப்பின.
புரோ பைக்கர்ஸ் என்ற பெயரில் இவரது மகன் சுரேஷ் நடத்தும் நிறுவனம் சைக்கிள் உலகில் ஒரு மறுமலர்ச்சியை சென்னை நகரில் ஏற்படுத்தி இருக்கிறது.உலகில் தயாராகும் அனைத்து வகை சைக்கிள்களும் இவரது ஷோரூமில் விற்பனைக்காக குவிக் கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சைக்கிள் கிளப் இவரின் முயற்ச்சியால் உருவாக்கப்பட்டது.
நகரின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரமுகர்கள், நடிகர்கள் என நகரின் பிரபலங்கள் இந்த கிளப்பில் உறுப்பினர் அல்லது புரவலர்களாக உள்ளனர். ஆரோக்கிய வாழ்வுக்கான பயிற்ச்சியை இந்த கிளப் இலவசமாக வழங்குகிறது. இது தவிர சைக்கிள் அகடமி ஒன்றையும் இவர்கள் உரு வாக்கியுள்ளனர்.
சைதாபேட்டை, சென்னையின் அரசியல் பிரபலங்களின் புகலிடம். தொழில் துறையில் பிரபலமான வி.ஜி. பன்னீர் தாஸ் வீட்டின் எதிரிலேயே, சைதை பாலாஜியும் பெரிய மாளிகை ஒன்றை கட்டி இப்போது அதில் குடி யிருக்கிறார்.சைதை நகரில் பாலாஜியை தெரியாதவர் எவரும் இல்லை.
70 வயதை கடந்த பின்னும் தன் தொழில் மீது மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டு திகழ்கிறார் இளைஞராக தோன்றும் இந்த முதியவர்.
இவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நானும் என் துணைவியாரும் எந்த முன் அறிவுப்புமின்றி அவரது வீட்டிற்கு சென்றோம். எங்களை பார்த்து அதிக சந்தோஷமடைந்த அவரும், அவரது குடும்பத்தினரும் உணவு அருந்தாமல் விடுவதற்கு மறுத்தனர். உடனடியாக அறுசுவை உணவு, அனைத்து வகையான மீன் வகைகளுடன், சுடச்சுட பரிமிறி மகிழ்ந்தனர் அவரது குடும்பத்தினர்.
சாப்பாடு போட்டவருக்கு நன்றி சொல்வது முறை. ஆனால் சாப்பாடும் தந்து, சாப்பிட்ட வர்களுக்கு நன்றி சொல்வது என்பது நான் இதுவரை கேட்டறியாத நடைமுறை.எங்களுக்கு நல்ல அருமையான உணவை வழங்கி அதை தங்கள் பெருமையாக கருதும் பால சுந்தரம் போன்றவர்களை நல்ல நண்பர்களாக பெற்றதை எண்ணி உள்ளபடியே நான் மிகவும் அகமகிழ்கிறேன். இவரது மகன் சுரேஷ் என் மகன் ஆஷிக்கின் உயிர் நண்பன்

12471526_10205434363007002_3872067841842079744_oVavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on July 31, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: