RSS

அவள் பெயரென்ன எனக்கு தெரியாதே

31 Jul

பல்லவி :
அவள் பெயரென்ன எனக்கு தெரியாதே
அவள் ஊரென்ன அதுவும் தெரியாதே
சாலையில் பார்த்த கண்ணாலே
நான் காதலில் விழுந்தேனே
பூவும் அவள்போல் அழகில்லை
வீசும் தென்றலும் அவள்போல் குளிரில்லை
கூந்தலின் வாசம் நுகர்ந்த பின்னே
நானே மறைந்தேனே
தேவதையே தேவதையே நீ யாரென்று
நின்று சொல்லிவிடு
புன்னகையை அம்பாக நீ வீசுவதை
நிறுத்திவிடு
சரணம் 1
நிலவு சேலை கட்டி மண்ணில்
நடந்ததுவோ
வானவில் நிறம் பறித்து வர்ணம்
பூண்டதுவோ
சாலையில் மலர்களெல்லாம் உன் பாதத்தில்
மலர்ந்ததுவோ
மலரில் தேனெடுக்கும் வண்டெல்லாம் உன்னை
மொய்த்ததுவோ
தேவதையே தேவதையே நீ யாரென்று
நின்று சொல்லிவிடு
புன்னகையை அம்பாக நீ வீசுவதை
நிறுத்திவிடு
சரணம் 2
உறக்கத்தை நான் தொலைத்து
கனவினை வாங்கி கொண்டேன்
நினைவினை நான் விற்று
கவிதையை பெற்றுக் கொண்டேன்
என்னை நான் இழந்து
உன்னுள் புதைந்து விட்டேன்
நீயே என்னுயிரென்றே
நானே வாழ்ந்திடுவேன்
தேவதையே தேவதையே நீ யாரென்று
நின்று சொல்லிவிடு
புன்னகையை அம்பாக நீ வீசுவதை
நிறுத்திவிடு….
பல்லவி :
(என் பாடல் தொகுப்பில் இருந்து)
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.

12804753_835493073243621_8747970568008875017_nஎன்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்
 
Leave a comment

Posted by on July 31, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: