RSS

விருப்பங்களும் – விமர்சனங்களும்

13 Aug

இன்றும் – எல்லா புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் களையும் படித்த பின், சிலவற்றை நான் விமர்சனம் செய்வதுண்டு. அதற்கான தேர்வு குழு, அதை பரிசீலத்த பிறகே அந்த விமர்சன ங்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளில் பதிவாகின் றன.மற்றவை புறந்தள்ளப்படுகின்றன.
ஆனால் சோசியல் மீடியாக்கள் வந்த பின்னர் பத்திரிகை விமர்சனங்கள் பற்றி இப்போது எவரும் கண்டு கொள்வதில்லை.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகள் கூட டிவி பக்கம் இப்போது நெருங்குவதில்லை. சூடு பறக்கும் விவாதங்கள் கூட கேட்க ஆட்களின்றி பெட்டிக்குள் முடங்கி விட்டன.
பெரும்பாலான பிரபல டிவி சானல்களும், பத்திரிகைகளும் மூடுவிழா காண தயாராகி வருகின்றன. இந்தியாவிலும் விரைவில் இந்நிலை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதையே ஆய்வறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன.
தனிமனித சுதந்திர உரிமைகள் நிலை பெற இப்போது சோசியல் மீடியாக்கள் அதிகம் உதவி புரிகின்றன.பிறர் தரும் கபட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள, இன்றைய இளம் தலைமுறை தயாராக இல்லை. மூளைச் சலவைகளும், கருத்து திணிப்புக்களும் இனி இளைய தலைமுறையிடம் எடுபடாது.
பேஸ்புக் – இந்த மாற்றம் நிகழ துணைபுரிகறது.
தனி மனித கருத்துக்கள் இங்கு அலசி ஆராயப்படுகிறது. கடும் விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. என்றாலும் இதிலும் தவறான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இல்லை.
எதை விரும்புவது, எதை விமர்சிப்பது என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
நிர்வாணங்களும், நிர்வாண உண்மைகளும் இங்கு அதிகம் விரும்பப் படுகின்றன.மசாஜ் செய்திகளை அப்டேட் செய்பவர்களுக்கே பாராட்டுக்கள் வெகுவாக குவிகின்றன.
கிளியோபாட்ராக்களே இங்கும் அரசாட்சி புரிகிறார்கள்.சாக்ரடீஸகளுக்கும், அரிஸ்டா டில்களுக்கும் இங்கு இடம் இல்லை.அவர்கள் சிரிப்பு நடிகர்களாகவே வந்து போகிறார்கள்.
எனது முகநூலில், பிரபல ஐஎஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பிரபல ஆடிட்டர்கள், லாயர்கள்,
டாகடர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், டைரக்டர்கள், ஒளிப்பதிவா ளர்கள், பேஷன் டிசைனர்கள், நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர் – அறியாதவர் என பலர் நிரம்பியிருக்கிறார்கள்.
இதை ஒரு டயரியாக கருதி கருத்துக்களை
பதிவு செய்வதில் தவறில்லை.கருத்துக்களை எல்லோரும் விரும்ப வேண்டும் என்று விரும்புவது தான் தவறு.
கைதட்டல் பெருவதற்காக வாழ்வது, வாழ்க்கை ஆகாது……
ஆடை குறைப்புக்களே, இப்போது அதிக விழிப்புணர்வு தோன்ற காரணமாகின்றன.
கைதட்டல்களையும் வாரி இறைக்கின்றன.
யோகா சூத்திரத்தின் தந்தை, பாதாஞ்சலி அதை கற்பித்த போது அதை கேட்க ஆட்கள் இல்லை. அதற்காக ஒரு நல்ல சீடனைத் தேடி பாதாஞ்சலி நாடெல்லாம் அலைந்ததாக அவர் வரலாறு சொல்கிறது.
சூத்திரன் சூத்திரம் உரைப்பதா என்ற முரட்டு கேள்வியின் பிண்ணனி தானே வள்ளுவன் சிலை கூட தலை குப்புற வீழ்ந்த சம்பவம்.
நிச்சயமாக என் பதிவுகள், என் டைம் லைனில், நான் ரசிப்பதற்காக மட்டுமே. பிறரை கவரும் எண்ணம் சுத்தமாக இந்த கிழவனுக்கு இல்லை. என் பேரக் குழந்தைகள் எங்கேயோ இருந்து என் பதிவுகளைப் பார்த்து ரசிக்கிறார்கள். (That thoughts alone) நினைப்பே – மன நிறைவை தருகிறது.
“ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தா லும் ரோஜா – ரோஜா தான்”
A ROSE IS A ROSE……….SHAKESPHERE

Vavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on August 13, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: