RSS

நல்ல ஆத்மாக்களின் தாலாட்டுதலில் இவ்வுலகை இறைவன் அழியாமல் காத்துக் கொண்டிருக்கிறான்

01 Sep

பிறருக்கு உதவி செய்வதில் இன்றியமையாததாக இருப்பது எது என்று சொல்லும் போது
அது முதலில் மனிதாபிமானமாகத்
தான் இருக்கிறது..

சிலரை பொறுத்தவரை பணத்தால் செய்வது
மட்டும் தான் உதவி
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஆனால் அது உண்மையல்ல மனதால் கூட பல பேருக்கு உதவி செய்யலாம்..

பிறர் மனம் புண்படாதவாறு நல்ல வார்த்தைகளை பேசுவது கூட ஒரு வகையில் அறம் தான்..

முகம் பார்த்து கடும் சொற்கள் கூறாதலும் ஒரு நல்லறம் தான்..

ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார் அவரை கைபிடித்து சாலையை கடக்க வழி செய்வதும்
அறம் தான்..

நோயுற்ற ஒருவரை பார்க்கிறோம்..அவருக்கு பணத்தால் உதவ முடியாத நிலை இருந்தால் கூட அவருக்காக உடலால் உதவுவதும் அறம் தான்..

வழியில் சந்திக்கும் மனிதர்களை ஒரு புன்னகையோடு கடந்து செல்வதும் அறம் சம்பந்தபட்ட விஷயம் தான்..

பிறருக்கு பணத்தையோ,பொருளையோ கொடுத்து உதவிச் செய்வதை விட கொடுத்ததை சொல்லி காட்டுவது மிக மோசமான அறம்..

இல்லாதவர்கள் தன்னிடம் வந்து மண்டி போட வேண்டும் என பணம் படைத்தவர்கள் நினைப்பதும் மோசமான அறம்..

தான் சொல்வது தான் சரி..பிறர் சொல்வது சரியல்ல என்று நினைப்பதும் மோசமான அறம்..

பிறர் மனங்களை புண்படுத்தி செய்யும் எல்லா வித உதவிகளும்,
ஒத்தாசைகளும் மோசமான அறம் தான்..

மேலும் வெளியில் சொல்லாமல் ரகசியமாக செய்யப்படும் தர்மங்கள் மறுமையில் இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது..

வாழ்க்கை பாதையில் ஏதாவது ஒருவர் எப்போதும், எங்காவது, எதையாவது ஒரு நல்ல காரியங்களைச் செய்துக்
கொண்டுதானிருக்கிறார்..

அப்படிப் பட்ட நல்ல ஆத்மாக்களின் தாலாட்டுதலில் இவ்வுலகை இறைவன் அழியாமல் காத்துக் கொண்டிருக்கிறான்
என்பது மட்டும் மறுக்க முடியா உண்மை.

11222455_10205129792066770_3351710952500777878_n

Saif Saif
 
Leave a comment

Posted by on September 1, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: