RSS

ராமன் மருத்துவமனை

18 Sep
Vavar F Habibullah

நாகர்கோவில் நகரை ‘மருத்துவ நகர்’ என்று
IMA மருத்துவ சங்கம் செல்லமாக அழைப்பதுண்டு.காரணம் சென்னையில் கூட
பார்க்க முடியாத சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள்
அந்த நாட்களில் நாகர்கோவிலில் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஒரு 50 வருடங்களுக்கு முன்னால் லண்டனில் படித்த டாக்டர்களால் நாகர்கோவில் நகரம் நிரம்பி வழிந்தது.

தன் சொந்த மக்களுக்காக பிறந்த ஊரில் மருத்துவப்பணி ஆற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு காரணமாக, வசதி வாய்ந்த ஆடம்பரமான மேநாட்டு வாழ்க்கை வசதிகளை துறந்து விட்டு எளிமையான வாழ்க்கை முறையை தன்னார்வத்துடன் ஏற்றுக் கொண்ட நாகர்கோவில் நகரில் வாழ்ந்த சில மருத்துவ மேதைகளை என்னால் மறக்க இயலவில்லை.

இவர்கள் மட்டும் அன்று அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்திருந்தால் மிக உயர்ந்த நிலையை மருத்துவ தொழிலின் மூலம் சாதித்து இருக்க முடியும்.கடமை உணர்வு கொண்ட மருத்துவர்களால் அரசியல்வாதி போல் நடிக்க முடியாததே இதற்கு காரணம்.

சண்முக வைத்தியர்,ராயல் வைத்தியர், சாமி வைத்தியர்,கணபதி ஆசான்,காட்டுக்கடை ஆசான் போன்ற நாட்டு வைத்தியர்கள் மத்தியில் FRCS, MRCP, FRCOG போன்ற மேநாட்டு மருத்துவ டிகிரிகள் சற்றும் எடு படவில்லை. நாகர்கோவில் மக்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.மிகத் திறமை வாய்ந்த இந்த மகா ஜாம்பவான்கள் நாகர்கோவில் நகரில் சற்று தரம் தாழ்ந்துத் தான் போனார்கள்.

டாக்டர்.சீதாராமன் FRCP
டாக்டர்.குருப் MRCP

டாக்டர்.ராமன் MD DM MRCP FRCP PHD
எனது நண்பர் இவர்.நாகர்கோவில் நகரின் முதல் கார்டியாலஜிஸ்ட் இவர் தான்.மக்கள் கண்டு கொள்ளவில்லை.உடன் மஸ்கட் சென்றார். இன்று ஓமன் நாட்டின் நமபர் ஒன் கார்டியாலஜிஸ்டாக திகழ்கிறார்.கோடீஸ்வரரான இவர் தான் ராயல் பேமிலிக்கு குடும்ப டாக்டர்.

டாக்டர்.ஷீலா தாமஸ் MRCOG
அன்றைய செயற்கை கருத்தரிப்பு முறையில் வல்லுநர்.இவர் கோட்டாறில் தான் முதலில் ஒரு கிளினிக் துவங்கினார்.கோட்டார் மக்கள் கண்டு கொள்ளவில்லை.

டாக்டர்.பாலசுந்தரம் FRCS
டாக்டர்.சியாமளா பாலசுந்தரம் FRCS
முதல் பெண் சர்ஜன் இவர்.

டாக்டர்.சார்ல்ஸ் MRCOG FRCOG
வேலூர் கிரிஸ்டியன் மெடிகல் காலேஜ்
மகப்பேறுத் துறை தலைவர். பேமஸ் OBS&GYNECOLOGIST.இவர் ஆண் என்பதால் இவர் திறன் நாகர்கோவில் மக்களுக்கு பலன் தரவில்லை.

டாக்டர்.வின்சன்ட் MD MRCP FRCP
நீண்ட நாட்கள் ரியாத் தான் இவரது திறமைகளை அங்கீகரித்து கெளரவித்தது.

டாக்டர்.ஹைமாவதி ரஜி MS FRCS(E)
FRCS(G) நாகர்கோவிில் நகரின் முதல் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்.அந்த நாட்களில் இத்துணை சிறப்பு பட்டங்கள் பெற்ற பெண் சர்ஜன்கள் சென்னை நகரில் கூட இல்லை.தன் தந்தை, மறைந்த கண்சிகிச்சை நிபுணர் டாக்டர்.ராமன் பெயரில் ஓரு மருத்துவமனை நிறுவ ஆசை பட்டார்.

நான் கூட அவரின் திறமைக்கு நாகர்கோவில் ராங்க் சாய்ஸ் என்று அப்போதே சொன்னேன்.

அவரது கணவர் டாகடர் ரஜி MS FRCS(G)
FRCS(E) புகழ் பெற்ற அந்த நாள், நாகர்கோவில் நகரின் முதல் யூராலஜிஸ்ட்.

அவரை நாகர்கோவில் நகர டாக்டர்களே கண்டு கொள்ளவில்லை.ஆனால் சவூதி அரசு அவரை இரு கரம் நீட்டி வரவேற்று, MOH-ல் மிக உயர்ந்த பதவியை அளித்து கவுரவித்தது.

ராமன் மருத்துவமனை இருந்த இடத்தை
இன்று நான் பார்க்கிறேன்.மங்கிப்போன மருத்துவமனை கட்டடத்தில் ஒரு மாளிகை. கூட்டம் அலை மோதுகிறது.போக்கு வரத்து ஸ்தம்பிக்கிறது.ஆரவாரம், குதூகலம்,
கொண்டாட்டம்!!
மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாகும்.வாழ்க நம் மக்கள்,
வளர்க அவர்கள் ரசனை.

Vavar F Habibullah

 

Advertisements
 
Leave a comment

Posted by on September 18, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: