RSS

Monthly Archives: October 2016

தீபாவளி கலாட்டா…

குழந்தைகளுக்கு துணி எடுத்தாச்சு
மனைவிக்கும் சேலை எடுத்தாச்சு
அடுத்து கணவனுக்கு எடுக்கணும் என்று ஜென்ட்ஸ் செக்சன் பக்கம் வந்த மனைவி
“ஏங்க இன்னும் முன்னூறு ரூபாதான் இருக்கு
எங்களுக்கெல்லாம் நல்ல ட்ரெஸ்ஸா எடுத்துட்டு
உங்களுக்கு மட்டும் விலை குறைவா எடுக்கறமேன்னு வருத்தமா இருக்குங்க” என்றார்
“பரவால்லப்பா, எனக்கு ட்ரெஸ் இல்லாமயா இருக்கு.
பசங்களுங்களுக்கும் உனக்கும் நல்லதா எடுத்தா போதும்”என்றார் கணவர்
அதற்கு கவலை தோய்ந்த முகத்துடன் மனைவி சொன்னார்
“அப்படீங்களா….சரிங்க,
அப்ப இந்த முன்னூரு ரூபால நானே வீட்டுக்குக் கட்டறதுக்கு
சாதா சேலை ஒன்னு எடுத்துக்கறேன்…”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…….

10308302_761321980678388_8634351939583140799_nநிஷா மன்சூர்

 

Advertisements
 
Leave a comment

Posted by on October 28, 2016 in 1

 

நெஞ்சே உனக்கிது, உபதேசம்!

கிருஷ்ணன்பாலா

பொய்யுரைக்கு அஞ்சுவாய்;
புகழுரைக்கும் அஞ்சுவாய்;
மெய்யுரைக்கு மிஞ்சுவாய்;
மேன்மைகளில் கொஞ்சுவாய்!
நஞ்சுரைக்கும் வஞ்சகர்கள்
நாவிருக்கும் வார்த்தைகள்;
கொஞ்சினாலும் கெஞ்சினாலும்
கோபம் கொண்டு தள்ளுவாய்!
வஞ்சகர்கள் அஞ்சுகின்ற
வார்த்தை என்னும் ஆயுதம்;
வெஞ்சமரில் வீசி நின்று
வெல்வதற்குத் துள்ளுவாய்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 27, 2016 in 1

 

மனிதர்கள் பலரிடத்தில்

நாகூர் கவி

14717312_1780256675555443_1953527411798059930_n

மனிதர்கள் பலரிடத்தில்
பெருமை நிறைந்திருக்கிறது
மனிதர்கள் சிலரிடத்தில்
பொறாமை நிறைந்திருக்கிறது
மழலைகளான எங்களிடம்
வறுமை மட்டுமே நிரம்பியிருக்கிறது…
விடிந்தால் என்ன உணவு
நாளை உண்ணலாமென்பது
வசதிப் படைத்தவர்களின் கவலை
ஒருவேளை உணவாவது
இன்றேனும் கிடைக்குமாயென்பது
அசதிப் படைத்த ஏழைகளின் கவலை… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 25, 2016 in 1

 

தமிழர் பண்பாடு

 

abdus-samad-e1476985940956
சிராஜுல் மில்லத்
தமிழரின் பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு ! நினைவில் போற்றத்தக்க பண்பாடு.

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க சமுதாயத்தினர் என்று சொல்ல வேண்டுமானால், சீனர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமர்கள், அரபு மக்கள் இருந்தார்கள். நம்முடைய மக்களும் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள். பிறநாட்டினரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் தமிழனுடைய சிறப்பு பட்டெனத் தெரியும்.

சீனர்கள் தங்களைச் சீனர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மற்றவர்களை அவர்கள் பிசாசு என்று கருதினார்கள்.

கிரேக்கர்கள் தங்களை ‘சிட்டிசன்ஸ்’ (குடிமக்கள்) என்று பெருமையாக அழைத்துக் கொண்டார்கள். மற்றவர்களை “ஏலியன்ஸ்” (அன்னியர்கள்) என்று சொன்னார்கள்.

வீரம் செறிந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட ரோமர்கள் தங்களை ரோமன்ஸ் என்று பெருமையாக கூறிக் கொண்டனர். மற்றவர்களை அடிமைகள் என்று இகழ்ந்தனர். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 25, 2016 in 1

 

ஊறுகாய்கள் …

Abdul Gafoor

உப்பை ஏராளமாய்
உறிஞ்சிடும் காய்களை
கண்டாலே நாக்குகளில்
எச்சில்கள் தாராளமாய்
ஊறிடும் நமக்கு ….
ஆரோக்கிய மனிதர்களின்
இரத்த வங்கிகளில்
அழுத்தத்தை சேமிக்கும்
முக்கிய மூலதனம் …
மாங்காய்களை நறுக்கி
எலுமிச்சைகளை வெட்டி
சிகப்பு நிறமுள்ள
மிளகு பொடிகளால்
முகப்பு தடவி
அழகு வெயிலில்
காய வைத்து
சுவைப்பதில் உற்சாகம் …. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 22, 2016 in 1

 

எனக்கேயான தேடல்….!

ஊரெல்லாம் விழித்திருக்க
என் உழைப்பு தொடர்ந்திருக்க
வளர்ச்சியை எட்டிவிட காத்திருக்கிறது
என் தேடல் ….!
எதிர் வரும் சவால்களை
திறமைகொண்டு மீட்டெடுத்து
சமாளித்து சாதித்திட காத்திருக்கிறது
என் தேடல்….
கரடுமுரடான பாதையையும்
உறுதிகொண்டு கடந்துவிட
காலத்தால் அழியாது காத்திருக்கிறது
என் தேடல்….
எனக்காக தரப்பட் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 18, 2016 in 1

 

தவிப்பு ….!

ராஜா வாவுபிள்ளை

வையகம் மீதினில்
உலவிடும் காற்றை
தேடியே வானில்
பறந்திடல் வேண்டுமோ
காண்பதை கொண்டிடவே
மனமது நாடிடுதே
ஞானத்தின் தோன்றுதல்
கருத்தினில் வேண்டாமோ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 16, 2016 in 1