RSS

ஆங்கிலம் ஒரு வேடிக்கையான மொழி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

11 Oct
அப்துல் கையூம்

வெயிட் தூக்கினால் வெயிட் லிஃப்டிங். ஓகே. கடையில் ஒரு சிறிய பொருளை திருடினால் கூட அதற்குப் பெயர் “Shop Lifting” என்று சொல்லணுமாம். என்னய்யா நியாயம் இது?
“Two leaders had key talks” என்று பத்திரிக்கையில் எழுதுவார்கள். அவர்கள் சாவியைப் பற்றியோ பூட்டைப் பற்றியோ பேசியே இருக்க மாட்டார்கள்.
முன்பே இறந்து போனவர்களை “லேட்” என்று போடவேண்டுமாம். அவர்கள் முன்பே அபிட் ஆகிப் போக, லேட்டாக இறந்து போகிறவர்கள் நாம்தானே? அப்ப நாம்தானே லேட்? லாஜிக்கே இடிக்குது சார்.
Dial தொலைபேசி காணாமல் போனபின்பும், Push Button தொலைபேசிகள் வந்த பின்னும், “please dial me” என்றுதான் சொல்கிறார்கள். இது என்ன கூத்து?
.
காரில் கூரியர் அனுப்பி வைத்தால் அதற்குப் பெயர் Shipment என்கிறார்கள். கப்பலில் அனுப்பி வைத்தால் அதற்குப் பெயர் Cargo-வாம். ரொம்பதான் நம்மை படுத்துறாங்க.
சைக்கிளுக்கு “பைக்” என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். சொல்லிட்டுப் போங்க;. யார் வேணாம்னு சொன்னாங்க? மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பெயர் BIKER என்று சொல்லணுமாம். பைக் (அதாவது மிதிவண்டி) ஓட்டுபவர்களுக்குப் பெயர் CYCLIST என்று சொல்லணுமாம். நல்லா இருக்குய்யா உங்க பாஷை..!!!
பிரியாணி வங்கினாலும் அதை இத்துனூண்டு டப்பாவில் நிரப்பி கொடுப்பதற்குப் பெயர் கண்டெய்னராம். கப்பலில் 20 அடி அல்லது 40 அடி நீளத்தில் ஏற்றும் பெரிய டப்பாவுக்குப் பெயரும் கண்டெய்னராம். என்ன சார் இது நியாயம்?
Hot Dog என்கிறார்கள். நாய்க்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. Ham என்றால் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி. அதற்கும் Hamburger-க்கும் சம்பந்தமே இல்லை.
In our crazy language “your nose can run” and “your feet can smell” என்று ஆங்கிலேயர் ஒருவர் எழுதியிருந்தார். ஆங்கிலம் வேடிக்கையான மொழி என்பதற்கு அவரது கூற்று ஒரு நல்ல உதாரணம்.
நாம்தான் குளிக்க வசதியில்லாத டாய்லெட்டாக இருந்தாலும் அதனை பாத்ரூம் என்கிறோம். அமெரிக்கர்கள் அதனை “Rest Room” என்கிறார்கள். ஏம்பா..! அது என்ன பயணியர் விடுதியா? உங்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேறு இடமே கிடைக்கவில்லையா?
P-U-T என்று எழுதினால் அதை “புட்” என்று வாசிக்கணுமாம். B-U-T என்று எழுதினால் அதை “பட்” என்று வாசிக்கணுமாம். Nife என்று எழுதினாலே போதுமே? KNIFE என்று ஏன் எழுத வேண்டும்? க்னோ (KNOW) என்று ஏன் எழுத வேண்டும்? சொல்லுங்க ஐயா சொல்லுங்க.
ஆமை வடைக்குள் ஆமை இல்லாததைப் போல, Egg plant-க்குள் முட்டை இருப்பது கிடையாது.
Butler English என்று சொல்கிறோமே. அது பிறந்ததே பிரிட்டிஷார் காலத்தில் மெட்ராஸ் மாகணத்திலிருந்துதானாம். ஆங்கிலம் என்பதே ஒரு Funny Language. அதை நம் ஆட்கள் மேலும் Funny ஆக்கியது அதைவிட வேடிக்கை.
ஒரு அலுவலகத்தில் பணி புரிந்த என் நண்பர், ‘முதலாளி இப்போதுதான் வெளியே போனார்” என்று சொல்வதற்கு “Boss just now passed away” என்று சொன்னதையும், ஒருவர் இறந்து போனதற்கு தந்தி அடிக்க சொன்னதற்கு அவர் “May his sole rest in piece” என தகவல் அனுப்பியதையும் என்னால் மறக்கவே முடியாது.
அரைகுறை ஆங்கிலம் தெரிந்த ஒருவர் ஜன்னலைத் திறந்து வை; ஜோராக காற்று வரட்டும் என்பதற்கு இப்படிச் சொன்னாராம் “ Open the windows. Let the Air force come in”
“காலங்காத்தாலே ஏண்டா என் பிராணனை வாங்குறே?” என்று சொல்வதற்கு நம்மவர்கள் எப்படிச் சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். “Morning morning why are you purchasing my breath?”
தன் மகனை ரயிலில் ஏற்றிவிடச் சென்ற ஒருவர் TTR-யிடம் பெர்த் டிக்கட் கேட்கிறார். “Sir, Please give birth to my son”.
ஆங்கிலப் பிரியர்களை தயவுசெய்து என்னை மன்னித்து விடவும்.

abdul kaium அப்துல் கையூம்
அப்துல் கையூம்
 
Leave a comment

Posted by on October 11, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: