RSS

ஊறுகாய்கள் …

22 Oct

Abdul Gafoor

உப்பை ஏராளமாய்
உறிஞ்சிடும் காய்களை
கண்டாலே நாக்குகளில்
எச்சில்கள் தாராளமாய்
ஊறிடும் நமக்கு ….
ஆரோக்கிய மனிதர்களின்
இரத்த வங்கிகளில்
அழுத்தத்தை சேமிக்கும்
முக்கிய மூலதனம் …
மாங்காய்களை நறுக்கி
எலுமிச்சைகளை வெட்டி
சிகப்பு நிறமுள்ள
மிளகு பொடிகளால்
முகப்பு தடவி
அழகு வெயிலில்
காய வைத்து
சுவைப்பதில் உற்சாகம் ….
பழங் கஞ்சியோடு
உப்புக் கொண்ட
ஊறுகாய்களை தொட்டுக்க
ஒப்புக் கொண்டு
சாப்பிட்டு அடிமையானோர்
நம்மில் ஏராளம் …
தலைமுறைகள் கடந்தும்
மக்களின் நாவுகளில்
நூறு காய்கள்
நிலை கொண்டாலும்
ஊறுகாய்களுக்கே முதலிடம் ….
ஊறுகாய்களின் உடலதை
கெடாமல் பாதுகாக்க
உப்பு பூசி
மனித குடலதை
கெட வைத்திட
தப்பு பூசுவது
நம்மவர்களின் வாடிக்கை ….
பரணியில் அடைத்த
பொல்லாத ஊறுகாய்கள்
இல்லாத இல்லங்களும்
மெல்லாத உள்ளங்களும்
தரணியில் இல்லை ….
அப்துல் கபூர்
அழகிய குறிப்பு ..
ஊறுகாய் சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை …

Abdul Gafoor

 
Leave a comment

Posted by on October 22, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: