RSS

மனிதர்கள் பலரிடத்தில்

25 Oct

நாகூர் கவி

14717312_1780256675555443_1953527411798059930_n

மனிதர்கள் பலரிடத்தில்
பெருமை நிறைந்திருக்கிறது
மனிதர்கள் சிலரிடத்தில்
பொறாமை நிறைந்திருக்கிறது
மழலைகளான எங்களிடம்
வறுமை மட்டுமே நிரம்பியிருக்கிறது…
விடிந்தால் என்ன உணவு
நாளை உண்ணலாமென்பது
வசதிப் படைத்தவர்களின் கவலை
ஒருவேளை உணவாவது
இன்றேனும் கிடைக்குமாயென்பது
அசதிப் படைத்த ஏழைகளின் கவலை…
எந்த மை தொட்டும்
எளிதாய் எழுதிவிடலாம்
வறுமையைத் தொட்டு மட்டும்
இலகுவாய் எழுதிவிட முடியாது
உணவுத் தேடவே நேரம் போதாது
உண்டத் தமிழும் வார்த்தை தராது…
புலவர் வீட்டு அடுப்பறையில்
புரண்டு புரண்டு குடிபுகும்
புலவர் தொட்டு எழுதுகையில்
நா வறண்டு வறண்டு அடிதொழும்
வறுமைப் பிணிப்பிடித்த அடிவயிறும்
சோறு கிடைக்காமல் தனியாக கூக்குரலிடும்…
வான் முழங்கும் இடிமுழக்கச் சப்தமன்று
சான் வயிறு முணங்கும் அடி முழக்கச் சப்தம்
வாத்தியக் கருவிகளால் இசைப்பார் பலருண்டு புவியில்
வயிற்றின் கதறலால் இசைப்போம் பாரிலுள்ளோர் செவியில்
வீணாக்கும் உணவை தாராளமாய் தருவீர்
விலைமதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற வருவீர்…!
14717302_1779425815638529_4205310973453533823_nநாகூர் கவி

agore Kavi
 
Leave a comment

Posted by on October 25, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: