RSS

நெஞ்சே உனக்கிது, உபதேசம்!

27 Oct

கிருஷ்ணன்பாலா

பொய்யுரைக்கு அஞ்சுவாய்;
புகழுரைக்கும் அஞ்சுவாய்;
மெய்யுரைக்கு மிஞ்சுவாய்;
மேன்மைகளில் கொஞ்சுவாய்!
நஞ்சுரைக்கும் வஞ்சகர்கள்
நாவிருக்கும் வார்த்தைகள்;
கொஞ்சினாலும் கெஞ்சினாலும்
கோபம் கொண்டு தள்ளுவாய்!
வஞ்சகர்கள் அஞ்சுகின்ற
வார்த்தை என்னும் ஆயுதம்;
வெஞ்சமரில் வீசி நின்று
வெல்வதற்குத் துள்ளுவாய்!
செஞ்சுடரின் கீற்றொளிபோல்
சீறுகின்ற மொழியினால்
மிஞ்ச வரும் பகைஉணர்வை
மிரள வைத்துக் கொல்லுவாய்!
தலைசிறந்த பண்புடன்
தமிழன் வாழ்ந்த காலத்தின்
நிலைமைமாறிப் போனதை
நிமிர்ந்து நின்று சொல்லுவாய்!
சரிவில்லாத கருத்தினையே
சாற்றுகின்ற போதினில்;
நரிகள் ஊளை இடுமெனில்
நடுநிலையை மீறுவாய்!
சொற்குவிப்பின் கூர்மையில்
சுவைமிகுந்த மொழியினை
தற்குறிகள் அறிவதில்லை;
தயவு காட்ட வேண்டுமோ?
அறிவு சார்ந்த கொள்கையை
அகல உழுது விதைப்பதும்;
அறிவு கெட்ட பேர்களை
ஆழ உழுது புதைப்பதும்
உனது தொழில் ஆக்கியே
உற்பத்தியைப் பெருக்குவாய்;
எனது எண்ணம் எப்பொழுதும்
இமயம் போலும் இருக்கவே –
நீயும் நானும் பிரிவில்லாமல்
நின்றிருந்து வாழ்வெலாம்
ஓய்விலாமல் உறுதியோடு
ஓங்கி வாழ்க, நெஞ்சமே!
இவண்-
கிருஷ்ணன்பாலா

10420371_947524151943890_6062241909680494729_n

Krishnan Balaa

 
Leave a comment

Posted by on October 27, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: