RSS

Monthly Archives: November 2016

வறட்டுக் கவுரவம் ….!

வானளாவ நீண்டு
வாழும் வழிகளை
வீணடித்து வீழும்
சோம்பலின் துணை தேடும்
உழைப்பை ஒதுக்கி வைக்கும்
முன்னேற்றம் தடுக்கும்
பழங்கதை பேசும்
புதுமை வெறுக்கும்
மாற்றத்தில் தன்னிலை இழக்கும்
போராட மறுக்கும்
வறுமையை வரவேற்கும்
இறந்தகாலத்தில் வாழ்ந்திருக்கும்
நித்திரையில் நிலைகொள்ளும்
நிம்மதியை நிற்கதியாகும்
நிகழ்காலத்தை துறக்கும்
கனவுலகில் சஞ்சரிக்கும் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on November 29, 2016 in 1

 

Your Site, Now in Other Languages: Introducing the Google Translate Widget — The WordPress.com Blog

In a single click, translate your site content into 100+ languages.

via Your Site, Now in Other Languages: Introducing the Google Translate Widget — The WordPress.com Blog

 
Leave a comment

Posted by on November 25, 2016 in 1

 

தீர்வு நம்மிடம் இருக்கிறது, எளிமையானதும் கூட.. செய்யத்தான் நமக்கு மனமில்லை…

Priya Thambi

வீட்டுப் பக்கத்தில் ஒரு வீட்டில் இரு குழந்தைகள். மூத்த சிறுமிக்கு எட்டு வயது, இரண்டாவது பையனுக்கு இரண்டு வயது.. அந்தக் குட்டிப் பையனின் பிடித்தமான விளையாட்டே அக்காவை அடிப்பது தான். கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து அடிப்பான்.. அவனின் அம்மாவிற்கு பெருமிதம் தாங்காது.. அந்தப் பையன் தவறி கீழே விழுந்தால், அழுதால், தனியாக விளையாடினால் எல்லாவற்றிற்கும் அந்த சிறுமி திட்டு வாங்கிக் கொண்டிருப்பாள்..
அந்த வீட்டில் வளரும் இரு குழந்தைகளும் மிக எளிதாக ஒன்றை புரிந்து கொள்வார்கள்.. ஒரு ஆண் அவனுக்கு இங்கே என்ன கேட்டாலும் கிடைக்கும்… அவனுக்கு பெண்ணை அடிக்கவோ, மிரட்டவோ உரிமை உண்டு.. பெண்ணுக்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையில்லை, தன்னை விட இளைய ஆணாய் இருந்தாலும் அவனுக்கு அவள் பணிந்து தான் போயாக வேண்டும்… இத்தனைக்கும் அந்தக் குழந்தைகளின் அம்மா படித்த, மேல்நிலைப்பள்ளி ஆசிரியை… Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 22, 2016 in 1

 

ஒவ்வொரு தினமும் அவர்களின் தினம்தான் !

Abu Haashima

14993381_1165215903557137_8482468785388047733_n

வீணையின் நாதத்தை விட …
புல்லாங்குழலின் காற்றை விட …
அந்த
உயிரின் இசை
சுகமாக இருக்கும் !
குயிலைப்போல்
செல்லமாக
இசையெழுப்பி வரும்
அவர்கள்
பூலோக தேவதைகள் !
அழுகையைப்போன்ற
சப்தங்களால்
நிசப்தங்களை உடைத்து
சந்தோஷ சிரிப்பலைகளை
பிரசவிக்கும்
அவர்கள்
பூமி பார்க்க வரும்
பச்சைக் குழந்தைகள் ! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 14, 2016 in 1

 

கொஞ்சம் சீரியஸான ஒரு ஜோக்……..

Gnanasekaran Veeriahraju

Shahjahan R(just for information)
கொஞ்சம் சீரியஸான ஒரு ஜோக்……..
நான் எனக்கு சொல்லிக்கிறேன்.
ஒருத்தர் தன் பையனோட கைவிரலை தொட்டுப் பாத்துட்டு “மகனே….சிகரெட் பிடிக்கிறியா?” ன்னு கேட்டார்.
“கிடையவே கிடையாதுப்பா” ன்னான் பையன்.
“இல்லை….நீ பொய் சொல்லலாம் ஆனா உன் விரல் பொய் சொல்லாது.
உன் விரல்ல நிகோடின்னால வர்ற மஞ்சள் கரை இல்லாம இருக்கலாம்…….
ஆனாலும் உன் கை விரல் நுனிகள் ஜில்லுனு இருக்கு. புகை பிடிக்கிறதுனால விரல் நுனியில இருக்க ரத்தக் குழாய்கள் அடைபட்டுப் போகுது. அதனால விரல்கள் இப்படி ஜில்லுனு ஆயிடுது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 12, 2016 in 1

 

மண் ….!

ராஜா வாவுபிள்ளை

குறைகள் குறைவில்லாமல் இருப்பதும்
மண்ணில் தான்
நிறைகள் நிறைந்து இருப்பதும்
மண்ணில் தான்
மனிதம் பிறந்ததும்
மண்ணில் தான்
மானுடம் தழைப்பதும்
மண்ணில் தான்
மனுநீதி பிழைப்பதும்
மண்ணில் தான்
மந்திரங்கள் ஜெபிப்பதும்
மண்ணில் தான் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 12, 2016 in 1

 

கடலும் வானமும் …

அப்துல் கபூர்

14264829_1774318612822432_3199210956569251049_n

கடலும் வானமும் …
நீருடை தைத்து
உடல் போர்த்தி
பொங்கி ஆர்ப்பரிக்கிறாள்
கடல் மங்கை …
எழிலாய் விரிந்த
கரங்கள் பறித்த
வெண்ணுரை பூக்களை
சரங்கள் தொடுத்து
அலையெனும் கூந்தலில்
சூட்டி மகிழ்கிறாள் … Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on November 5, 2016 in 1