RSS

கொஞ்சம் சீரியஸான ஒரு ஜோக்……..

12 Nov
Gnanasekaran Veeriahraju

Shahjahan R(just for information)
கொஞ்சம் சீரியஸான ஒரு ஜோக்……..
நான் எனக்கு சொல்லிக்கிறேன்.
ஒருத்தர் தன் பையனோட கைவிரலை தொட்டுப் பாத்துட்டு “மகனே….சிகரெட் பிடிக்கிறியா?” ன்னு கேட்டார்.
“கிடையவே கிடையாதுப்பா” ன்னான் பையன்.
“இல்லை….நீ பொய் சொல்லலாம் ஆனா உன் விரல் பொய் சொல்லாது.
உன் விரல்ல நிகோடின்னால வர்ற மஞ்சள் கரை இல்லாம இருக்கலாம்…….
ஆனாலும் உன் கை விரல் நுனிகள் ஜில்லுனு இருக்கு. புகை பிடிக்கிறதுனால விரல் நுனியில இருக்க ரத்தக் குழாய்கள் அடைபட்டுப் போகுது. அதனால விரல்கள் இப்படி ஜில்லுனு ஆயிடுது.
சிகரெட் உன் உடம்பை பாதிக்க ஆரம்பிச்சுட்டுது. உடனே நிறுத்திப்புடு. நான் சொல்றதை கேட்கலன்னா உன் விரல் சொல்றதைக் கேளு”,
அப்படின்னு புத்திமதியெல்லாம் சொல்லிட்டு அப்பா கேட்டார்:
“அது சரிப்பா….தினமும் சிகரெட் உனக்கு எங்கிருந்து கிடைக்குது?” ன்னார்.
“உங்க பாக்கெட்ல இருந்துதாம்ப்பா எடுக்கறேன்” ன்னான் பையன்.
புத்தி சொல்றவங்க இப்படி இருந்தா, கேக்கறவங்க எப்படிங்க இருப்பாங்க?
அது வேற விஷயம்….இப்படி விரல்கள் எல்லாம் ஓவர் சிகரெட்னால ஜில்லுன்னு ஆகி, பின்னால அதுவே gangrin அப்படிங்கற நோயா மாறி (இது சர்க்கரை அதிகமா இருக்கவங்களுக்குத்தான் வரும்னு இல்லை) விரல் நுனிகள்ல இருந்து அழுகிப் போக, அதுவும் முக்கியமா, கால் கட்டை விரல்ல, ஆரம்பிச்சு, காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து, அதுக்கப்பறம் உயிருக்கே ஆபத்தாயிடும்.
காமேஷ்-ராஜாமணி இசைக்குழுவுல முக்கியமான காமேஷ் அவர்கள் (நடிகை கமலாகாமேஷ்) இறந்ததற்கு முக்கிய காரணமே அவரது புகை பிடிக்கும் பழக்கம்தான்.
இதை அவங்களே ஒரு பேட்டியில சொல்லியிருக்கிறதை எப்பவோ படிச்ச ஞாபகம்.
இதெல்லாம் நம்ம சொன்னா யாரு கேக்கப் போறா…?
இருந்தாலும் ஊதுற சங்கை ஊதி வைப்போம். அதுக்காக வழக்கம் போல ஒரு படமும் போட்டு வைப்போம்.

https://www.facebook.com/shahjahanr

 
Leave a comment

Posted by on November 12, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: