RSS

ஒவ்வொரு தினமும் அவர்களின் தினம்தான் !

14 Nov
Abu Haashima

14993381_1165215903557137_8482468785388047733_n

வீணையின் நாதத்தை விட …
புல்லாங்குழலின் காற்றை விட …
அந்த
உயிரின் இசை
சுகமாக இருக்கும் !
குயிலைப்போல்
செல்லமாக
இசையெழுப்பி வரும்
அவர்கள்
பூலோக தேவதைகள் !
அழுகையைப்போன்ற
சப்தங்களால்
நிசப்தங்களை உடைத்து
சந்தோஷ சிரிப்பலைகளை
பிரசவிக்கும்
அவர்கள்
பூமி பார்க்க வரும்
பச்சைக் குழந்தைகள் !
இறைவனே அனுப்பிவைப்பதால்
அவைகளின்
மூடிய கைகளுக்குள்
இறைவனின் அருள்
நிறைந்திருக்கும் !
தன்னை
அள்ளி எடுப்பவர்களுக்கும்
அரவணைத்து
அன்பு பொழிபவர்களுக்கும்
அந்த அருளின் இன்பங்களை
வாரி வழங்கும்
அட்சய பாத்திரமது !
குழந்தைகள் வளர வளர
நம் முகம் பார்க்கும்
அழும்
சிரிக்கும்
அட்டகாசம் செய்யும்
வேண்டிய பொருள் கேட்டு
அடம் பிடிக்கும்
அதட்டினால் முகம் சிவக்கும்
அடிக்காமலே அலறும்
அள்ளியணைத்தால்
அலுக்காமல்
முத்தம் தரும்
பகையே கொள்ளாது
நகையால்
நமை வெல்லும் !
பிள்ளைகள் மேல்
பாசம் பொழியும்
பொழுதெல்லாம்
அமரர்கள்
நம் மீது
வாழ்த்துக்களை
இறைத்துக் கொண்டே
இருப்பார்கள்
ஒருபாடு !
அது இறைவன் ஏற்பாடு !
குழந்தைகளுக்கென்று
ஒரு தினமில்லை …
ஒவ்வொரு தினமும்
அவர்களின் தினம்தான் !

Abu Haashima
 
Leave a comment

Posted by on November 14, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: