RSS

Monthly Archives: December 2016

ராணியின் செல்வன்

Vavar F Habibullahசரித்திரத்தின் பக்கங்களிலிருந்து பலவந்தமாக அழிக்கப்பட்டு, துடைத்து எறியப்பட்டாலும் சில உண்மைகள் பல காலங்களுக்கு பிறகு உயிர்த்தெழுந்து பெரிய மனிதர்களின் சின்ன ரகசியங்களை எல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே செய்கின்றன.
சில பெரிய மனிதர்களோடு வாழ்வதாலேயே சில சிறிய மனிதர்கள் கூட… மக்களால் பேசப்படும் நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.
1876 – ம் ஆண்டுகளின் துவக்கத்தில்…
இங்கிலாந்து பேரரசின் விக்டோரியா
மகா ராணியார் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் ராணியாரின் குடும்ப உறுப்பினர்களையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணியாரின் பாராட்டுரைகள் அவர்களை கதிகலங்க
வைத்தன. அவரின் பிள்ளைகள் கடும் கோபம் கொண்டனர் சிலரோ பொறாமை கொண்டனர். அப்படி மகாராணியார் என்ன தான்
சொல்லி விட்டார்!!
“இந்த பிள்ளை என்றால்… எனக்கு உயிர்.
காரணம் அவன் நல்லவன், அழகானவன்,
மென்மையானவன், என் உணர்வுகளை நன்கு அறிந்தவன், அவன் என் அருகில் இருக்கும் போதெல்லாம் நான் உண்மையில் மிகவும் ஆறுதல் பெறுகிறேன்”.
இந்த வார்த்தைகள் ராணியாரின்
9 குழந்தைகளில் எவரையாவது குறித்துசொல்லி இருந்தால் அல்லது இறந்து போன மகாராணியாரின் கணவர் ஆல்பர்டை நினைவில் வைத்து சொல்லியிருந்தால் மொத்த குடும்பமும் மகிழ்ந்திருக்கும்..
கரவொலி எழுப்பி இருக்கும். Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on December 31, 2016 in 1

 

செருமற்பொருட்டொரு குறிப்பு..!!

சற்றே குரலெழுப்பிச் செருமுவதென்பது
வருகைகுறித்த ஒரு அறிவிப்பு
சற்றே கம்பீரம்கூட்டிச் செருமுவதென்பது
ஒரு உரையாடலுக்கான முன் தயாரிப்பு
சற்றே தயங்கிக் கைக்குட்டை மறைத்துச்
செருமுவதென்பது சபை நாகரீக முன்னெடுப்பு
பிரியமானவளின் செருமலிலிருந்து இசைக்குறிப்புகளை மீட்டெடுப்பதென்பது
வானளாவிய நேசத்தின் கல்வெட்டுக் குறிப்பு
சற்றும் ஒலியெழுப்பாமல் குரலடக்கிச்
செருமுவதென்பது
உறங்கும் மனையாள் குழந்தைகள் குறித்த அக்கறை பொருட்டு
புறக்கணிக்கப்பட்ட ஒரு முதியவரின்
பயத்துடனும் படபடப்புடனுமான செருமலில்
கிளம்புகிறது
நவநாகரீக குடும்பத்தினரின் முகச்சுளிப்பு
“போங்கடா பொட்டப் பசங்களா ” என்று கத்துமுன் அழுகையைக் கடித்துமென்று விழுங்கிக்கொண்டு
அந்தச் சிறுமி செருமியதில் திமிறியது,
ஒரு புலியின் உறுமலைப் போன்றதொரு தெறிப்பு.
#நிஷாமன்சூர்

நிஷாமன்சூர்

 
Leave a comment

Posted by on December 31, 2016 in 1

 

எங்கள் நேசத்திற்க்குறிய உகாசேவாவின் அழகு..?? கபூரைப்பற்றி சில வரிகள்

 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக உகாசேவின்
தலைமை பதவியை அலங்கரித்தவர்
உகாசேவாவில் பத்து ஆண்டுகளுக்கு
முன்னால் மிகப்பெறிய சல சலப்பு
ஏற்ப்பட்டு சிலர் கத்தியை காட்டி மிரட்டிய
போதும் கூட அஞ்சாமல் அவர்களையே
தன்னுடைய அழகு பேச்சுத்திறமையால்
ஒற்றுமை என்னும் விதைதூவி இன்று
ஆலமரம் போல் வளர்வதற்க்கு காரணமாக
இருந்தவர்களில் இவரும் ஒருவர்
யார் இவரை தேடிவந்தாலும் அழகாக
வந்தீங்க அண்ணே
அழகாக சொன்னீங்க அண்ணே
என்று தனக்கு இறைவன் தந்த அழகிய
முகத்தை வைத்து இவர் சொல்லும்
பாங்கே அலாதியானது எதிலுமே அழகு
என்கிற ஒரு வார்த்தையை சேர்த்து
சொல்வதால் பெரும்பாலோர்
இவரை அழகு கபூர் என்றே அழைப்பார்கள் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 30, 2016 in 1

 

—யாவாரமெல்லாம் எப்படி இருக்கு?

Shahjahan R

டிசம்பர் மாதம், அதுவும் கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு, கூட்டமில்லாத ரயிலைப் பார்த்தது இதுவே முதல் முறை. ஊருக்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள்தான் டிக்கெட் பதிவு செய்தேன். 28ஆம் தேதிக்கான டிக்கெட்டை 22ஆம் தேதி மிக சாதாரணமாக பதிவு செய்ய முடிந்தபோதே மனதுக்குள் இடித்தது. அப்போதும்கூட 180 டிக்கெட்டுகள் காலியாக இருந்தன. எப்படியோ, எனக்கு டிக்கெட் கிடைத்ததே என்ற திருப்தியுடன் ஊருக்குப் போய் 28ஆம் தேதி சென்னையிலிருந்து ரயில் ஏறினேன். தில்லி-சென்னை பயணத்துக்கு மக்கள் ஜி.டி. எக்ஸ்பிரஸை அதிகம் விரும்புவதில்லை என்றாலும், ரயில் காலியாக இருப்பதில்லை. ஆனால் இந்த ரயிலில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பாதிவழி நாக்பூர் வந்த பிறகு இன்னும் பல காலி இடங்களைக் காண முடிந்தது.
சென்னையிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே இழுக்கத் துவங்கியது. இரவு 7 மணிக்குப் புறப்பட்டது, ஆந்திரத்தில் நுழைந்து பத்து மணிக்குள் ஒரு மணி நேரம் தாமதமாக்கி விட்டதால், கணிசமாக தாமதமாகத்தான் தில்லி போய்ச் சேரும் என்று முடிவு செய்து கொண்டேன். எதிர்பார்த்தபடியே ஐந்தரை மணி நேர தாமதம் என்ற அறிவிப்புடன் ஆறு மணி நேர தாமதமாக வந்து சேர்ந்தேன்.
ஜிடி எக்ஸ்பிரஸ் சேர வேண்டிய நேரம் 6 – 6.30 மணி. எனவே, சமையல் பெட்டியில் ஏதும் இருக்காது. முந்தைய இரவோடு உணவு வகைகள் முடிந்து விடும், தேநீர் மட்டுமே காலையில் கிடைக்கும். ரயில் தாமதமாகி விட்டால், காலையில் சாப்பிட ஏதும் கிடைக்காது. தேநீரும்கூட சற்று நேரத்துடன் முடிந்து விடும். இப்போதும் அதுவே நடந்தது. வழியில் நின்ற இடங்களில் பிரெட் பக்கோடாவும், தேநீரும் குடித்துக்கொண்டே வந்தவனுக்கு ஆறுதலாக மதுராவைக் கடந்த பிறகு வந்தார் கடலை விற்கும் முதிய பெண்மணி ஒருவர். ஆக்ராவிலும், மதுராவிலும் பெரும்பாலான ஆட்கள் இறங்கிவிட காலிப்பெட்டியில் வியாபாரமின்றி களைத்துப்போய் அமர்ந்தவரிடம் 10 ரூபாய்க்கு கடலை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வழக்கம்போல அரட்டையைத் துவங்கினேன்.
—என்னம்மா… உங்களுக்கு ஹரியாணாதானே?
—ஆமா
—எந்த ஊரு?
—மதுரா
—யாவாரமெல்லாம் எப்படி இருக்கு? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 30, 2016 in 1

 

மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவரின் மனம் சுக்குநூறாக உடைந்துப் போயிருக்கிறது.

Yuva Krishna

15727090_10211816047303641_6533805166992833972_nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வண்ணத்திரை’ வார இதழில் நடிகர் போண்டா மணி அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தோம். திரையுலகினர் மத்தியிலும், வாசகர்களிடமும் பெரும் வரவேற்பை, Yogi Devaraj அவர்கள் எடுத்த இந்த பேட்டி பெற்றிருக்கிறது.
பொதுவாக நம்பர் ஒன் நடிகைகளின் பேட்டியையே நான்கு அல்லது ஐந்து பக்கங்கள்தான் வெளியிடுவோம். ஆனால், இந்த நேர்காணல் ஏழு பக்கங்கள் வரை நீண்டதற்கு ஒரு காரணம் உண்டு. பேட்டியில் இடம்பெறாத அந்த ரகசியம், இந்த ஸ்டேட்டஸின் இறுதியில்…
போண்டா மணி அவர்கள் ஈழத்தமிழர். 83 இனக்கலவரத்தின் போது சிங்கப்பூருக்கு தப்பி உயிர் பிழைத்தவர். ஆறு அண்ணன், ஆறு அக்கா, இரண்டு தம்பி, ஒரு தங்கை என்று பதினைந்து பேரோடு பிறந்தவர். கலவரத்தில் சகோதர சகோதரிகள் சிலரை இழந்தார். அவருடைய அம்மா உயிரோடு இருக்கிறாரா என்று இன்றுவரை மணிக்கு தெரியாது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 27, 2016 in 1

 

உண்மை ; நியாயம் ;நேர்மை; கிலோ எவ்வளவு…

15590573_1414848855215896_8351937489492589061_nஉண்மை ; நியாயம் ;நேர்மை;
கிலோ எவ்வளவு…
பொய்யையும்; புரட்டையும்
நிரப்பிக்கொண்டு – எப்போதும்
உற்காரத்திற்கு உற்சாகமாய் ஊடகம்;
அங்கீகரிக்கும் பொய்யென்பதை
அறிந்து – அச்சுகளில்
மெய்ச்சிக்கொண்டிருக்கும் சஞ்சாரம்;
பணத்திற்காகப் பக்கங்களை
விலைக்கு விற்கும் ஊடகத் தர்மத்தின் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 27, 2016 in 1

 

வாழ்க்கையின் மதிப்பு

diamondஅப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை.
சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது.
“வாழ்க்கையின் மதிப்பு என்ன?”

சிறு வயதினன் என்பதால் அனுபவ ரீதியில் இந்தக் கேள்விக்கு விடையளிக்க நினைத்தவர் அவனிடம் ஓர் ஒளிரும் ரத்தினக் கல்லைக் கொடுத்துச் சொன்னார் “உனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் காட்டி, இதன் மதிப்பை அறிந்து வா; ஆனால் யாரிடமும் இதை விற்று விடாதே”
சிறுவன் மகிழ்வுடன் அந்தக் கல்லைப் பெற்றுக்கொண்டான். முதலில் தான் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கும் தள்ளுவண்டிக்காரரிடம் காண்பித்தான். ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள் தருவதாகவும், தனக்கு அக்கல்லைக் கொடுத்துவிடும்படியும் அந்த வண்டிக்காரர் கேட்டார். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 27, 2016 in 1