RSS

My dear Dr. Habibullah I am more happy and relaxed in my new business.பிரபல சர்ஜன் டாக்டர் நாகராஜன் FRCS ஜவுளிக்கடை அதிபர்

02 Dec

Vavar F Habibullah

என் மாப்பிள்ளை டாக்டர். நாகராஜன்
15284139_10207814542470001_8028779291430108377_nடாக்டர்.நாகராஜன் FRCS (LONDON)
ST.சேவியர்ஸ்(Xaviers College, Palayamkottai) இருந்து நாகராஜன் என் கிளாஸ் மேட். படிப்பில் மகா கெட்டிக்காரன்.
எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான்
இருப்பான். பார்ப்பதற்கு அந்தக் கால இந்தி சினிமா நடிகர் சசிகபூர் போன்ற தோற்றம்.
மதுரை மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் லண்டன் சென்று விட்டான்.
டபுள் எப்.ஆர்.சி.எஸ். எல்லாம் இளவயதிலேயே முடித்து விட்டு லண்டனிலேயே
குடும்பத்தோடு தங்கி விட்டான்.
25 வருடங்களுக்கு மேல் லண்டனில் ஒரு பிரபலமான சர்ஜன் டாக்டர் நாகராஜன். அவன் இப்போது நாகர்கோவிலில் நிரந்தரமாக
செட்டில் ஆகி விட்டான்.
என்னை பார்த்தால்
எப்போதும் ‘மாப்பிள்ளை’ என்று தான் செல்லமாக அழைப்பான்.எல்லா விசயங்களையும் மனம் திறந்து பேசுவான்.சில விசயங்களில் எனது அட்வைசையும் கேட்பான்.
இன்று அவனை சந்தித்து அவன் செய்யும்
புதிய தொழில் பற்றி விசாரித்தேன்.லண்டன் டாக்டருக்கான எந்த மிடுக்கும் பெருமையும் அவனிடம் இல்லை.அன்பும் அடக்கமுமே அவனது அசையா மூலதனமாக இன்றும உள்ளதைக் கண்டு நான் மிகவும் வியந்தேன்.
“மாப்பிள்ளை…
எத்தனை.. எத்தனை சர்ஜரிகள் இந்த கை கொண்டு செய்திருப்பாய்!
எப்படிடா! இந்த கை கொண்டு இப்போது
துணிகளை வெட்டிக் கொண்டிருக்கிறாய்!
மனித உடல்களை காப்பாற்ற கத்தியை பிடித்த கைகள் இப்போது துணி வெட்ட கத்தியை பிடிக்கலாமா!”
சற்று நகைச்சுவையோடு தான் இந்த கேள்வியை அவனிடம் கேட்டேன்.
“மாப்பிள்ளை..
உன்னை மாதிரி எனக்கு இப்போது அதிக டென்சன் இல்லை.ஒரு சர்ஜனா இருந்தப்போ இருந்த டென்சன் எனக்கு இப்போது இல்லை.
இந்த ஜவுளி பிசினசில் நான் மிகவும் ரிலாக்சாக இருக்கிறேன்.புதிய தொழில் என்பதால் அதிகம் கற்றுக் கொள்ள முடிகிறது. ஐ பீல் மோர் ரிலாக்ஸ்ட்.”
மேம்பட்ட படிப்பினால் எந்த பயனும் இல்லை.
நம் தகுதியை நிர்ணயிக்கும் நிலைகளில் நம் நோயாளிகளும் இல்லை.நல்ல துணியை தரம் பிரித்து ஆயிரம் முறை புரட்டிப் பார்க்கும் மக்கள், நல்ல டாக்டர்களை மட்டும் தரம் பிரித்து பார்க்க தவறி விடுகிறார்கள்.
நாகர்கோவில் நகரில் பிரபல மருத்துவ மனைகள் ஜவுளிக்கடைகளாக மாறும்போது
ஒரு பிரபல சர்ஜன் ஜவுளிக்கடை அதிபராக மாறுவதில் என்ன தவறு.
டாக்டரிடம் வேலைக்கு வரும் பிளம்பர் கூட டாக்டர் என்பதால் அதிக சார்ஜ் கேட்கிறான்.
பிளம்பர், எலக்ட்ரீசியன், பார்பர் இவர்களுக் கெல்லாம் டாக்டர் ஒருநல்ல கஸ்டமர்.ஆனால் டாக்டர்களிடம் வரும் நோயாளிகள் எப்போதுமே பணக்கார கஸ்டமர்களாக
இருப்பதில்லை.
பிசினசில் இந்த பாகுபாடுஇல்லை.
ஏழை, பணக்காரர் எல்லாமே தங்களுக்கு பிடித்த சிறந்த ஜவுளி ரகத்தையே தேர்வு செய்கிறார்கள்.சிரித்து கொண்டே கேஷ் பேய் செய்யும் கஸ்டமர்களை என் வாழ்நாளில் இப்போது தான் சந்திக்கிறேன்.மனம் நிறைவாக இருக்கிறது.
பெரிய மருத்துவமனைகளில் சர்ஜிகல்
கன்சல்டண்டாக அழைக்கிறார்கள். எனக்கு
ஆர்வமில்லை.ஐவுளித் தொழில் இப்போது எனக்கு மிகவும் பிடித்த தொழிலாகி விட்டது.
டாக்டர் நாகராஜன் FRCS தான் நாகர்கோவில் நகரின் மத்தியில் அமைந்த பிரபல நேதாஜி டெக்ஸ்டைல் ஜவுளி நிறுவனத்தின் அதிபர்.
தந்தையின் பிசினசை மகன் இப்போது வழி நடத்தி செல்கிறார்.
No regrets
My dear Dr. Habibullah
I am more happy and relaxed in my new business.
மாப்பிள்ளை நாகராஜன் தான் சொன்னான்

12471526_10205434363007002_3

 

Vavar F Habibullah
 
Leave a comment

Posted by on December 2, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: