RSS

அண்ணலே யா ரஸூலல்லாஹ் !

03 Dec

99names_inside

Abu Haashima

தண்ணீரில்லாமல் தவித்த மண்ணும்
கண்ணீரில் மிதந்த பெண்ணும்
அடையாளங்களாக இருந்த
அரபு தேசம்
அடைக்கலம் தேடி வந்தது
தங்களிடம்தானே
அண்ணலே
யாரஸூலல்லாஹ் !
உங்கள் மீது
கல்லை எறிந்து
கண்கசிய சிரித்தவர்கள்
உங்கள் பெயரைக்கேட்டு
கைவிரலால்
கண்களை முத்தமிட்டு
மனம் கசிந்தார்களே…
கல்லையும்
கரையவைத்து
ஈரம் சுரக்க வைத்த
அதிசயமும்
தாங்கள்தானே
அண்ணலே
யா ரஸூலல்லாஹ் !
பிறக்கும்போது
உங்கள் பெயரைக் கேட்டு
கண் விழிக்கின்றோம்
இருக்கும் போது
சலாத்தும் சலாமும் சொல்லி
வாழ்கின்றோம்
இறக்கும்போதும்
உங்கள் பெயர் கேட்டுத்தான்
கண்மூடுகின்றோம்
எப்போதும்
உங்களை வாழ்த்தி
வல்லோனை வணங்கும்
எங்களுக்கு
மறுமையிலும் உற்றதுணை
தாங்களன்றோ
அண்ணலே
யாரஸூலல்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யாரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஹபீபல்லாஹ் !
#மீலாதுந்நபிநினைவுகள்

13428598_1042194425859286_1880725967439899307_nAbu Haashima
Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: