RSS

இறைவா…

03 Dec

இறைவா…
உன் கருணைப் பார்வை
என் மீதும் பட்டதால்
உன் இல்லம் காணும்பேறு
எனக்கும் கிட்டியது
எல்லாப் புகழும் பெருமையும்
உனக்கே உனக்கே..

கிழக்கென்றும் மேற்கென்றும்
வடக்கென்றும் தெற்கென்றும்
திசைகள் வேறுவேறில்லை
உன் வீட்டு எல்லையில்
எல்லாத் திசையும்
ஒன்றாய் சங்கமமானது
உன் வீடே
எங்களுக்குத் திசையானது.

நீ அருளிய பாக்கியங்களுக்கு
நன்றிச்செலுத்த வந்தேன்.
உன்னை நினைவுக்கூறும் நாவும்
அனுதினமும் உனக்கு
நன்றிச் செலுத்தும்
உள்ளமும் வேண்டி
உன் வீட்டில் மீண்டும்
கையேந்தி நின்றேன்.

எல்லாம் கொடுத்தவனுக்கு
எதைத் திருப்பிக் கொடுப்பது
அதனால்தானோ
உன் வீட்டில்
காணிக்கைச் செலுத்தவதற்கும் உண்டியலும் இல்லை.

நிறபேதமற்று
இனபேதமற்று
மொழி பேதமற்று
வணக்கத்துக்குரியவன்
உனையன்றி யாருமில்லை
எனும் ஈமானின் உருதியோடு
உலகத்து மாந்தெரெல்லாம்
ஓரணியில் சங்கமித்து
சமத்துவ சமுதாயம்
மலர்ந்த இடம்.
கஅபா எனும் இறையில்லம்.

உன் இல்லம் சுற்றிவந்து
க அபாவில் அணிவிக்கப்பட்டிருக்கும்
கிஸ்வா வில்,
உன்னடியார்கள்
மனமுருகி பிரார்த்தித்து
சிந்தும் கண்ணீர்த் துளிகள்
காற்றில் உலர்ந்து
உதிர்வதுபோல்
கோபத்தை மிஞ்சிய
உன் கருணையினால்
அவர்களின் பாவங்களைப்
போக்கி விடுகிறாய்.
மனதில் கனத்த இருளை
நீக்கி விடுகிறாய்.
எல்லாப் புகழும் பெருமையும்
உனக்கே உனக்கே..

உன்னைக் காண வந்த
அடியார்கள்
ஜம் ஜம்
நீரைப் பருகும் வேளையில்
மனதில் நீந்தும் எண்ணங்களை
நிறைவேற்றுகிறாய்
அடியார்களின் நம்பிக்கையில்
உரமேற்றுகிறாய்.

இறப்பெய்திவிட்டவரின்
இறுதித் தொழுகை அழைப்பில்
இறந்தவர் யாரென்று
இங்கே கூடிஇருப்பவர்களில்
பலரும் அறியார் எனினும்
மறுமை வாழ்வுக்காய்
எல்லோரும் மனமுறுகி பிரார்த்திப்பர்

மரணிக்கும் வேளையிலும்
மாசற்ற ஈமானின்
உறுதிவேண்டி
யாசித்தேத் திரும்புகிறோம்
காத்தருள்வாய் ரஹ்மானே..

Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: