RSS

புதியது….!

03 Dec

புதியது என்று எதுவுமில்லை. நமக்கு புதியதாக தெரியும் பலவும் நமது மூத்தவர்களுக்கு பழையதாகவோ பழகியதாகவோத்தான் இருக்கும்.
இரவும் பகலும் இன்னும்
பலவும் மாறிமாறி வந்துகொண்டேதான் இருக்கும்.
பள்ளிசென்று புதிய பாடங்கள் படிப்பது அவசியமே என்றாலும் குடும்ப பாடங்களை சந்ததியினருக்கு படித்துக் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு தாய் தந்தைக்கும் முக்கியமான கடமையாகும்.
முக்கியமாக இளவயதில் ஆரோக்யமும் ஆற்றலும் அதிகமாகவே இருக்கும் ஆனால் பருவம் மாறும் ஒவ்வொரு பருவத்திலும் வரும் வாழ்விய ல் , உளவியல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை நாம் கடந்தே வந்திருக்கிறோம்.
நமது சந்ததியினருக்கும்
அந்ததந்த பருவத்தில் நாம் சந்தித்த அதேமாதிரியான
பிரச்சினைகள் வருவது மிகவும் சாத்தியம்.
அதை முன்னரே அவர்களுக்கு தெரிவித்திருந்தால் அவர்கள் வருமுன் காத்துக்கொள்ளலாம். திடீர் மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சி அடைவதையும் தடுக்கலாம்.
பணத்தில் புதியது பழையது என்று ஒன்றும் இல்லை. ஆனால் புதுப்பணக்காரர்கள் இருக்கிறார்கள். பழைய பணக்காரன் என்று சொல்லும் வழக்கமில்லை, வாழ்ந்து கெட்டவன் என்றுதான் சொல்வார்கள்.
அது சரி ….
பணத்தில் கருப்பு வெள்ளை எல்லாம் உள்ளதா என்று கேட்டால் நான் என்ன சொல்ல இருக்கிறது ?
பிங்க் பணம் இருக்கிறதாக சொல்லிகிடுதாங்க !
வரலாறு திரும்பலாம். அரசே வரலாற்றை திருப்பினால் அழிவுதா ன். அந்த ஹிட்லரும் இதைத்தானே சொல்லி சொல்லி வச்சு வச்சு செஞ்சான். யாருக்கு மக்களுக்குத்தான் கஷ்டம். உலக மக்களுக்கு இது ஒன்றும் புதியது அல்லவே.
எண்ண ஓட்டம் ….!

1915784_1752216725002117_6437085887224788060_n

ராஜா வாவுபிள்ளை

Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: