RSS

காங்கோ பயணக்குறிப்பு ….! தங்கம்.

04 Dec
ராஜா வாவுபிள்ளை

 

காங்கோவிலுள்ள குள்ளமனிதர்களைப் பற்றிய தகவல்களை முந்தைய பதிவுகளில் பகிர்ந்தேன். அது கழிந்த பதிவோடு முடிவுற்றது. உகாண்டாவில் இருந்து தொடங்கிய எனது காங்கோ நாட்டுப்பயணம் கிழக்கு கொங்கோவின் பெனி நகரிலிருந்து கிசங்காணி எனும் பழம்பெரும் நகரை நோக்கி நகருகிறது. அப்போது நான் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதர்கள், இடங்கள், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நிகழ்வுகளை காண்போமா ?
உலகிலேயே மிகவும் அதிகமான கனிமவளம் நிறைந்த நாடு காங்கோ ஆகும். கிழக்கு காங்கோவின் பெனி நகரிலும் கனிமவளம் ஏராளம் உண்டு. உலகின் மிகப்பெரும் சுரங்க நிறுவனங்களில் தொடங்கி சிறு, குறு நிறுவனங்களும் மற்றும் தனிநபர்களும் தங்கத்தை மண்ணிலிருந்து தோண்டி எடுத்துக்கொள்கின்றனர்.
இவ்வளவு அபரிமிதமான தங்கம் காங்கோவில் கிடைத்தும் இங்குள்ள பெண்களோ ஆண்களோ தங்கத்தை ஆபரணமாக அணிவதை நாகரிகமாகவோ பெருந்தனத்தை ஊரார்க்கு காட்டுவதற்காகவோ என்று கருதவில்லை. தங்கத்தை ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கின்றனர்.
கொங்கோ தனிமனிதர்கள் எவ்வாறு தங்கத்தை எவ்வாறு சந்தைப் படுத்துகின்றனர் ?
ஆற்றங்கரைகளில் தங்கம் இருப்பதாக நம்பப்படும் இடங்களில் தோண்டப்படும் குழிகளில் (இதுவே சாதாரண மக்களின் சுரங்கம்) நாட்கணக்கில் அரும்பாடுபட்டு டன்கணக்கிலான மண்ணில் ஆற்று நீரை கலந்து சகதியாக்கி, மேலும் நீர்சேர்த்து நீரோடு சேர்ந்த மண்ணை வடித்து நீக்கிவிட்டு மீதமிருக்கும் தெளிந்த மணலையும் கல்லையும் உலோக சட்டியைக் கொண்டோ அல்லது பிளாஸ்டிக் பேசனைக் கொண்டோ அரித்து சோம்பல்படாமல் மேலும் மேலும் அரித்து முடிவில் ஓரிரு தங்கத் துகள்களோ சமயங்களில் ஒன்றுமில்லாமலோ யோகமாக எப்போதாவது சிறு துண்டாகவோ தங்கம் கிடைக்கும்.
நான் சிறுவயதினனாக காடு கரைகளை எங்கள் ஊரில் நாகர்கோவிலில் சுற்றி வரும்போது சிற்றாற்றங்கரையிலும் சிற்றோடை கரைகளிலும் ஒரு உலோக சட்டியை கொண்டு அதிலிருந்து எடுத்த மண்ணை அரித்து பொன்னை தேடிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். வளர்ந்து ஆளாகி தொழில் நிமித்தம் ஆப்ரிக்க வனாந்திரத்தில் மண்ணை அரித்து ஆனிப் பொன்னை எடுப்பதையும் நேரில் பார்த்தது இறைவன் அருள் தான்.
அதை சிறுக சிறுக சேர்த்து வைத்து பக்கத்துக்கு நகருக்கு கொண்டுவந்து சிறு வியாபாரிகளிடம் விற்று பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். சிறுவியாபாரிகள் சிறுக சிறுக சேர்த்து அது ஒரு தோலாவிற்கும் கூடுதலானதும் பெரிய வியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள். பெரிய வியாபாரிகள் உகாண்டாவில் தலைநகரம் கம்பாலாவிலோ கென்யாவின் தலைநகரம் நைரோபியிலோ கொண்டுசென்று மொத்தமாக மொத்தவியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் கடுமையான அந்நியச்செலாவணி மற்றும் தங்கத்திற்கு கட்டுப்பாடுகள் இருந்தது யாவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில் காங்கோவிலிருந்து (கடத்தி) கொண்டுவர்பவர்கள் பலவகைகளில் தங்கத்தை மறைத்து கொண்டுவருவார்கள். அதிலொன்று ஆடையாக அணியும் கோட்டின் தையல் இடைவெளியில் தங்கத்துகள்களை நிரப்பி மறைத்து வைத்து கொண்டுவருதல் ஆகும்.
இந்த சாதாரண மக்கள் தங்கத்துகள்களை அளப்பதற்காக உபயோகிப்பது ஆப்பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜெர்மானிய தயாரிப்பான பிக் குச்சிப் பென்னின் மூடி இது சிறிய அளவு. பெரிய அளவாவது ஒரு தீப்பெட்டியின் கொள்ளளவு.
காங்கோ நாட்டு மக்களில் ஐந்தில் மூன்றுபேர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கனிமவளத்தை சார்ந்தே தங்களது அன்றாட வாழ்விற்கான ஆதாரத்தைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.
பாகம் 9
தொடரலாம்.

1915784_1752216725002117_6437085887224788060_nராஜா வாவுபிள்ளை
Advertisements
 
Leave a comment

Posted by on December 4, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: