RSS

அதிகம் பற்றில்லா வாழ்க்கை

05 Dec

1234874_718428048172371_839907419_nஇஸ்லாத்தில் துறவறம் இல்லை.. ஆனால் உலக வாழ்க்கையை அதீத பற்று கொண்டு பதவி ஆசை, பொருள் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை, மக்கள் ஆசை என்ற தீவிர ஒட்டுதலை இஸ்லாம் வரவேற்கவில்லை. இறைவனின் நல்லடியார்களுக்கு இவ்வுலகம் ஒரு சிறைச்சாலையைப் போன்றது என்றும், தீயவர்களுக்கு இவ்வுலகம் சொர்க்கம் என்றும் நபி(ஸல்) அவர்கள் சொன்னதே இவ்வுல வாழ்வில் அதிக பற்று கொள்ளல் வேண்டாம் என்பதற்காகத் தான்..
நாம் நம் சொந்தங்களிடம் அதிக அன்பு பாசம் நேசம் கொள்ளும் போது அவர்கள் நம்மை மீறி, நம் சொல்லை மீறி நடக்கும் போது ஆத்திரம் எல்லையில்லாமல் வரும்.. அவர்கள் நம்மை விட்டும் விலகும் போது நம் உயிர் நம்மை விட்டு பிரிவது போல இருக்கும்… அவர்கள் மரணித்தால் நாமும் கூட மரணிக்கனும்னு எண்ணும் அல்லது மனநோயாளியாக்கிவிடும். இன்னும் இந்த அதிக பாசம் நேசத்தால் தவறு செய்யும் நம் உறவுகளை கண்மூடித் தனமாக ஆதரிப்போம். நியாயம் கூட தவறாக வழங்க வேண்டிய சூழ்நிலை வரும். இது போல வாழ்வில் பல சலனங்கள், மனக் குழப்பங்கள் விளைய அதிக பற்று வைத்தலே காரணமாகி விடும்.
நம் வாழ்வின் சாசுவதம், உண்மை என்ன என்று விளங்கிக் கொள்ளல் தான் பற்றற்று இருப்பது என்று சொல்கிறேன். இவ்வுலகில் எதுவும் நிலையில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலே பற்றற்று இருப்பது ஆகும்… அந்நிலை வந்து விட்டால் அராஜகம் செய்து பொருளீட்ட தோன்றாது, யாருக்கும் அநியாயம் செய்ய மனம் விழையாது. பிறரைப் பார்த்து பொறாமை வராது. மன அமைதி பெறலாம். கோபம் இல்லாத அமைதியான வாழ்வு வாழலாம்.

15253610_1530938810254620_2188694724430589673_nதகவல் Sadeek Ali Abdullah

Advertisements
 
Leave a comment

Posted by on December 5, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: