RSS

நாமே !சக்தி !

05 Dec

Kalaimahel Hidaya Risvi
1175684_588918424506369_1620844870_nநாமே !சக்தி !
எழிலுரு உலக மாதா
இதயமாம் இளைஞர் சக்தி !
தொழிலெனும் கருவி கொண்டு
துரத்துதல் ஆகும் ! பொல்லா ,
இழி விருள் வறுமை தன்னை
இரவியை மிளிரும் தூய
விழைவுடன் இளைஞரே நீர்
விரும்பியே உழைக்க வாரீர் !

பள்ளியில் படித்தோம் !மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி பூண்டு
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வி னோடு
திறம்பட உழைத்து மண்ணை
வெள்ளிடை மலையாய் என்றும்
விளங்கிட வைக்க வாரீர் !

காடுகள் மாய்த்து நல்ல
கழனிகள் உண்டு பண்ணி
மேடுகள் வளம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூடியே மகிழ்ந்து வாழக்
கூடியே உழைக்க வாரீர் !
ஏர்பிடித் துழுவோம் !நல்ல
எந்திரம் துணையாய்க் கொள்வோம்!
போர்வைகள் தம்மை நீக்கிப் !
புதுமைகள் உழைப்பில் செய்வோம்
கார் மழை தன்னைத் தேக்கிக
காசினிக் குதவும் வண்ணம்
சீர்மையாய்ப் பயிர்க்குப் பாய்ச்சி !
செகமது செழிக்கச் செய்வோம் !
தேயிலை இறப்பர் தெங்கு
சிரித்திடும் வயலின் நெல்லு !
ஆயநற் கனிகள் நூறும்
அறு சுவைக் குதவும் யாவும்
நேயமாய் வளர்ப்ப தாலே !
நிலத்திடை வளங்கள் கூடும்
சாயந் திடும் கதிர் வளத்தால்
தலையை நாம் நிமிர்த்த லாமே !
இளைஞர் கை இணைந்தா லிங்கு
எங்கிலை அபிவி ருத்தி ..?
வளை கரம் வாளை ஏந்தி
வயற் கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப் பிடுங்கி வீசிக்
காரிய மாற்றும் போதும்
களைந்து போம் வறுமைக் கோடு
காணுமே !வளத்தை நாடு !
உயர்வினுக் இளைஞ்ர் சக்தி ,
ஒன்று பட்டினையு மானால் !
நயம் பல வந்து கூடும்
நலிவுகள் மறைந்தே ஓடும்
புயங்களை உயர்த்தி யிந்தப்
பூமியை பசுமை யாக்க
இயக்கமாய் எழுமின் !எங்கள்
இளைஞரே ! நாமே !சக்தி !

12931145_1129582253773314_9181143825413562427_nKalaimahel Hidaya Risvi
=========================
(சந்த வசந்த இணையத் தள வகுப்பில் )என் கவி பற்றி என் ஆசான் அன்பு அண்ணன் subbaier ramasamiஅவர்களது பாராட்டு
பாடல் நல்ல எழுச்சியுடன் அமைந்துள்ளது.
அன்பு நானா அபூல் கலாம் அவர்களது பாராட்டு
அன்புத்தங்கையின் அறுசீர் விருத்தம் அழகு, அற்புதம் , அருமை!

Kalaimahel Hidaya Risvi

Advertisements
 
Leave a comment

Posted by on December 5, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: