RSS

ராணியின் செல்வன்

31 Dec

Vavar F Habibullahசரித்திரத்தின் பக்கங்களிலிருந்து பலவந்தமாக அழிக்கப்பட்டு, துடைத்து எறியப்பட்டாலும் சில உண்மைகள் பல காலங்களுக்கு பிறகு உயிர்த்தெழுந்து பெரிய மனிதர்களின் சின்ன ரகசியங்களை எல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே செய்கின்றன.
சில பெரிய மனிதர்களோடு வாழ்வதாலேயே சில சிறிய மனிதர்கள் கூட… மக்களால் பேசப்படும் நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.
1876 – ம் ஆண்டுகளின் துவக்கத்தில்…
இங்கிலாந்து பேரரசின் விக்டோரியா
மகா ராணியார் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் ராணியாரின் குடும்ப உறுப்பினர்களையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணியாரின் பாராட்டுரைகள் அவர்களை கதிகலங்க
வைத்தன. அவரின் பிள்ளைகள் கடும் கோபம் கொண்டனர் சிலரோ பொறாமை கொண்டனர். அப்படி மகாராணியார் என்ன தான்
சொல்லி விட்டார்!!
“இந்த பிள்ளை என்றால்… எனக்கு உயிர்.
காரணம் அவன் நல்லவன், அழகானவன்,
மென்மையானவன், என் உணர்வுகளை நன்கு அறிந்தவன், அவன் என் அருகில் இருக்கும் போதெல்லாம் நான் உண்மையில் மிகவும் ஆறுதல் பெறுகிறேன்”.
இந்த வார்த்தைகள் ராணியாரின்
9 குழந்தைகளில் எவரையாவது குறித்துசொல்லி இருந்தால் அல்லது இறந்து போன மகாராணியாரின் கணவர் ஆல்பர்டை நினைவில் வைத்து சொல்லியிருந்தால் மொத்த குடும்பமும் மகிழ்ந்திருக்கும்..
கரவொலி எழுப்பி இருக்கும்.
ஆனால் மகாராணி விக்டோரியா இவ்வாறு நெகிழ்ந்து பேசியது அவரது பணிவிடைக்காக (orderly) பணியில் அமர்த்தப்பட்ட 24 வயதே ஆன ஒர் இந்திய முஸ்லிம் இளைஞன் என்றால் எவருக்குத் தான் கோபம் ஏற்படாது.
அப்துல் கரீம் என்ற அந்த இந்திய முஸ்லிம் இளைஞரின் கதை சற்று விசித்திரமானது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1876 – ல்,
இந்தியாவில் மகாராணியாக விக்டோரியா (Empress of India) பதவி ஏற்றுக் கொண்ட நேரம் அது.
மகாராணியாருக்கு இங்கிலாந்தில், (Buckingham Palace) இந்திய உணவு வகைகளை தயாரித்து பராமரிப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆக்ராவில் சென்ட்ரல் ஜெயிலில் கிளார்க்காக பணி புரிந்த கரீமு க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்து சென்ற அப்துல் கரீம் மிக விரைவிலேயே மகாராணியாரின் அன்புக்கு உரியவரானார்.மகாராணியாரோடு இவருக்கு இருந்த நெருக்கம் கண்டு அரண்மனை திகைத்தது. கரீம் துணையில்லாமல் மகாராணியார் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.
கரீமுக்கு சரளமான ஆங்கிலத்தில்
உரையாட தேர்ந்த ஆங்கிலஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரச குடும்பத்தினர்
தங்கும் இடத்தின் அருகிலேயே கரீமுக்கும் தங்குவதற்கு ஒரு மாளிகையை ராணியார் கட்டி கொடுத்தார்.விரைவிலேயே ராணியாரின் அந்தரங்க செயலராக பதவி நியமனம் பெற்றார்.
மகாராணியாருக்கு ஹிந்தி மற்றும் உருது மொழியை கற்பிக்கும் ஆசிரியராகவும் இவர் மாறினார். இதனால் ‘முன்ஷி’ என்ற கவுர
பட்டம் ராணியாரால் வழங்கப்பட்டது.
இதைப் போன்றே ‘ராவ் பகதூர்’ போன்ற ஏராளமான உயர் பட்டங்களும், விருதுகளும் மகாராணியாரால் இவருக்கு வாரி வழங்கப்பட்டன.
ராணியாரின் பக்கிங்ஹாம் அரண்மனையில், இங்கிலாந்தின் அரசியலில் தலையிடும்
அளவுக்கு கரீமின் செல்வாக்கு வளர்ந்தது.. உயர்ந்தது. ராணியாரின் உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் இவர் வலம் வந்தார்.
இந்தியாவிலும் அரசியல் சம்பந்தமான சில முடிவுகளில் இவரது பங்கீடு அதிகம் இருந்தது. ராணியாரின் ஜரோாப்பிய சுற்று பயணங்களிலும் கரீம் ஆலோசகராக கலந்து கொண்டார்.உலக தலைவர்களை எல்லாம் ராணியார் இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியாவிலும் இவரது செல்வாக்கு வளர்ந்தது.
இவர் பிறந்த ஆக்ராவில், இவருக்காக பெரிய நிலப் பரப்பை ராணியார் இவருக்காக
வழங்கினார். (Karim Lodge)
1887 முதல் 1900 ஆண்டு வரை ராஜ யோகத்தில் மிதந்தார் இவர்.மகாராணியாரின் வளர்ப்பு பிள்ளையாகவே இவர் திகழ்ந்தார்.
இவரின் அரண்மனை செல்வாக்கு கண்டு அரண்மனை திகைத்தது. ஒரு கருத்த இந்திய முஸ்லிம் இளைஞரின் அந்தப்புர செல்வாக்கு அரச பிரதானிகளையும், அதிகாரிகளையும் அதிர வைத்தது.ராணியாரின் பிள்ளைகளால் கூட இவரது வளர்ச்சியை தடுத்து நிறுத்திட இயலவில்லை.
1901 – ல் நிகழ்ந்த விக்டோரியா மகாராணியாரின் மரணம் கரீம்
வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்தது..
ராணியாரின் மகன் மன்னர் எட்வர்ட்
ஆணைப்படி முன்சி கரீம் இந்தியாவுக்கு
திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
மகாராணியாரிடமிருந்த அவர்கள் தொடர்பு கொண்ட ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழித்தொழுக்கப்பட்டன.
என்றாலும், இந்தியாவில் கரீம் கைப்பட
எழுதி வைத்த ஒரு ரகசிய டயரி எல்லா விவகாரங்களையும் பரசியப் படுத்தி விட்டது. ராணியார் இறந்த துயரம் தாங்காத கரீம் மிகவும் இளம் வயதில் காலமானார்.
மகாராணியாருக்கு வாரிசுகளே இல்லாமல் போயிருந்தால் வளர்ப்பு மகன் என்ற முறையில் முன்சி அப்துல் கரீம் கூட இங்கிலாந்தின் மன்னராக முடிசூடி இருக்க முடியும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
Victoria and Abdul is an interesting book to read.. based on his personal secret diary
written by Munshi. Hafiz Abdul Karim
Author. Sharabani Basu

Vavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on December 31, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: