RSS

Monthly Archives: January 2017

மனிதர்களின் காலமிது ….!

 

அலங்கார சிலுவை
ஆசையாய் சுமக்கும்
மனிதர்களின் காலமிது
அன்றாட அலுவல்களில்
காற்றாய் கரைந்துபோகும்
மனிதர்களின் காலமிது
அவ்வப்போதும் கூட
உறவுகளை நினைக்காத
மனிதர்களின் காலமிது
பணம் தின்று
உயிர் வாழும்
மனிதர்களின் காலமிது
உணவிலும் ரசாயனம்
கலந்து ரசித்துண்ணும்
மனிதர்களின் காலமிது Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on January 30, 2017 in 1

 

தனிமைக்குமான உறவு…

கவி அமுதன்

எனக்கும் தனிமைக்குமான உறவு மிகவும் அந்நியோன்னியமானது. அது மனிதனுக்கும் ஆடைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. தனிமையின் இருள்களுக்குள் தவம் கிடப்பதை நான் அதிகம் யாசிப்பவன். அந்தக் கணங்களில் தான் என்னுள் அதீத கற்பனைகளும் சிந்தனைத் தெளிவுகளும் உட்பிறவாகமெடுக்கும். அந்தத் தனிமை என்னை அளக்கும் ஒரு அளவு கோலாகவும் பயன்படுவதுண்டு. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 29, 2017 in 1

 

சரித்திரம் முக்கியம் தோழர்களே ….!

 
50 இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர்.
இயல்பாகவே இளைஞர்கள் உத்வேகம் மிக்கவர்கள். அவர்களை எவ்வழி செலுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வழிநடத்தி செல்லவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் அவர்கள் வாழும் நாட்டின் அரசுக்கும் இருக்க வேண்டும்.
இளைய தலைமுறையினர் போகும் போக்கு சரி இல்லை. நாங்களெல்லாம் இப்படியா வளர்ந்தோம்?
பெற்றோரையும் மூத்தொரையும் ஆசிரியரையும் மதித்தோம் என்றெல்லாம் சொல்வது இப்போதெல்லாம் கேட்க முடிகிறது. ஆனால் அவர்கள் காலத்தில் சமுதாயமும் நாட்டு நடப்பும் மாறிவிட்டதே! இதை யாருமே எண்ணிப்பார்ப்பதே இல்லை. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 29, 2017 in 1

 

இருப்பை திறக்காதீர்கள்.

Taj Deen

பொக்கிஷ வார்த்தைகளின்
விரயம் தவிர்க்க
இருப்பை திறக்காதீர்கள்.
கொள்கை முழக்கங்களையும்
லட்சிய வேட்கைகளையும்
கண் இழந்து
யாசிப்பவர்களிடம்
மனமுவந்து தந்துவிடுங்கள்.
எட்டி நடைபோடும் நாளில்
இடிப்படும் வண்ணப் பூச்சு
மேவும் அழகே அழகு.
கதவுகள் திறந்தே இருக்கட்டும்
ஒளிக்கீற்று மினுக்கும்
சாளரங்களில் தட்டாது
பக்ஷிகள் படபடக்கும் நித்தம்.

16387070_1275767842492956_6849868837650144053_n

Taj Deen
 
Leave a comment

Posted by on January 27, 2017 in 1

 

குடியரசு தின சிந்தனைகள்

Vavar F Habibullah

மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு
தேர்வு செய்யப்பட்ட ஆளவந்தார்களால்
நடத்தப்படும் மக்களாட்சியே ஜனநாயகம்.
மன்னர்களின் தர்பார்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் சாதாரண
குடி மக்ளை குறி வைத்தே அந்த காலங்களில் நகர்த்தப்பட்டன.
மன்னர்களின் தயவில் இந்திய திருநாட்டில் காலடி எடுத்து வைத்த காலணி ஆதிக்கம் மன்னர்களை வேரோடு அழித்து மக்களை அழித்து தாய் மண்ணின் கருவூலங்களை கொள்ளையடித்து நாட்டை சீரழித்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்,
பாதுகாப்பற்ற நலிந்த மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பலாத்காரங்கள், அடக்கு முறைகள் காலணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க சாதாரண மக்களையும் தூண்டின.
சுதந்திர தாகம் பற்றி எரிந்ததன் விளைவு வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி அடித்ததன் மூலம் சற்று தணிந்தது.
1947 ஆகஸ்ட் 15 ம் நாள் – காலணி ஆதிக்கம் அகன்று இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 27, 2017 in 1

 

நாகூர் ரூமி புத்தகங்கள்

என் உயிர் நண்பர் நாகூர் ரூமி. நல்ல அறிஞர். ஒவ்வொரு விடயங்களையும் தீர ஆராய்ந்து அதற்காக இரவு பகல் பாராது உழைத்து நூல் எழுதி வெளியிடுகிறார். இதுவரை எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறார் என்ற கணக்கு அவருக்கு தெரியுமோ என்னவோ…!
இந்த புத்தகம் கூடுதலாக விற்பனையாகும் என்று நினைக்கிறேன்.

அப்துல் கையூம்

 
Leave a comment

Posted by on January 11, 2017 in 1

 

மண் வீடு !

திடீரென்று வந்த வேலையை
செய்து முடித்து
திரும்பி வரும்போது
மழை பிடித்துக் கொண்டது!
ஒருசில அடிகள்
வேகமாக ஓடி
ஒதுங்குவதற்குள்
உடையெல்லாம்
தொப்பல் !
முதலில்
மழையில் நனையாமல் ஒதுங்க
ஓடியவன்
இப்போது
மழையை விட்டு ஒதுங்க
மனமில்லாமல்
நனைந்துகொண்டே
நடக்க ஆரம்பித்தேன்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 7, 2017 in 1