RSS

இப்படிக்கு கோதை நூல் பற்றி….

05 Jan

15871727_1320789754646512_7702425230784054603_n

அரங்கனும் அன்னவயற்புதுவை ஆண்டாள் நாச்சியாரும் தம்மிடையே எழுதிக்கொண்டதாகக் கருதப்பட்டு திருவில்லிபுத்தூர் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட “திருமுகங்களாகிய” கடிதங்களின் பின்புலத்தை மையமாகக்கொண்டு, “நான் ராஜாமகள்” , அவர்கள் எழுதிய அருமையான கடிதத்தொகுப்பு நூல்தான் “இப்படிக்கு கோதை”. திராவிடக் குடும்பத்தைச் சார்ந்த தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் இந்த நூலின் நயம் பற்றி வரலாற்றுத் தரவுகளுடனும், திருவரங்க நிகழ்வுகளோடும், சிவனாண்டி, பிரமாண்டி, மாயாண்டி என்ற சிறுதெய்வ வழிபாட்டோடு தொடர்புபடுத்தி கோதையை வேடுவகுலத்துதித்த பெண்ணாகக் கருதி, “பெயர்த்தும் ஆண்டாளுக்கே பிச்சியாவோம்” என்று வாழ்த்துரைகளாக நிறைப்பதைக் காண்கையில் இதுநாள்வரை கோதை என்னும் பெயரை “கோதா தேவி” என்று மண்ணுக்குப் “பொருந்தாப்பெயர் வைக்கும்” உயர்குலத்துக்கே உரித்தானவள் என்று சமூகம் கட்டிவைத்திருக்கிற பொய்க்கோபுரம் உடைந்துபோய் “கோதை எளியோர் இல்லத்துப்பேதை” என்று எண்ணவைத்தது.
ஸ்ரீமுகங்கள் ஒவ்வொன்றிலும் நான் ராஜாமகள் தனக்கேயுரிய குறும்புத்தமிழில் அரங்கனாக மாறி ஆண்டாளை காதற்செல்லங்கொஞ்சுவதும், அவற்றையெல்லாம் ஆண்டாள் மாறி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதும், மறுமொழியாக ஏக்கங்கலந்து, ஊடலால் சினந்தாலும் சீரியருளாமல், அரங்கனை பேதை மொழியில் வஞ்சகரென்றும், பொருத்தமிலியென்றும் வசைபாடுவதும், தான் நூறு தடாக்களில் வெண்ணெயும், அக்காரவடிசிலும் படைப்பதாக மதுரை -மாலிருஞ்சோலை அழகருக்கு வேண்டிக்கொண்டதைப் பின்னாளில் இராமானுசர் நிறைவேற்றியதால் அவரை தன் அண்ணன் என்று பாசம் காட்டும்போதும், அரங்கன் வில்லிபுத்தூர் வருகின்ற சூழல் அருகில் இல்லையென்று அறியும்போதில் ஏதிலியாய் உள்ளம் நலிந்து, கையறுநிலையில், வருத்தம் மேலிடக் குமைந்துபோவதுமாக கோதையாகவே மாறிப்போய் நிற்கின்றார். இருவருக்குமிடையே நடக்கும் கடித உரையாடல்களில் பாசுரங்களைக் கையாளும் நூலாசிரியரின் பாங்கு, ஆழ்வார்களே நேரில் வந்து நின்று பாசுரங்கள் சொல்லி ஊடலைக் குறைத்துவிட்டோ அல்லது நீட்டிவிட்டோப் போவதுபோல உணர்கிறேன் நான்.
என் பால்யங்களின் அதிகாலைகள் ஒவ்வொன்றும் கோவை வானொலியின் பல்சமயப் பக்திப்பாடல்கள் கேட்டுத்தான் தொடங்கின. குறிப்பாக மார்கழியில் பக்திப்பாடல்களுக்கு மாற்றாக திருப்பாவையும், பொருள் விளக்கமும் முப்பதும் தப்பாமல் ஒலித்தபோது, எனக்கு தெய்வத்தமிழ் கோதை என்னும் ஆண்டாள் அறிமுகமானாள். ஆயினும், “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற ஆண்டாள் என் இளமைக்காலத்தில்தான் அறிமுகமானாள். அதோடு பெண்ணின் உள்ளுணர்வுகளை ஒளிவுமறைவின்றி காமத்தீயால் வாடி வதங்கியபோதில் “பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோராசையினாலென் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து” என்று திருமொழியாக வந்துவிழுந்த சொற்களைப் புரிந்துகொண்டபோதில் இந்தக்காதல் பலித்து இந்தப் பேதைப்பெண்ணின் வாட்டத்தை அரங்கன் தணிக்கவேண்டும் என்று நான் ஏங்கியதுண்டு. அந்த ஏக்கங்களை எல்லாம் வரியாக இலைமறைகாயாக எளிய நம் பேச்சுமொழியில் வடித்ததில் பெண்ணுள்ளத்தை அறிந்துப் போற்றும் வடிவாக திகழ்கிறார் ராஜாமகள்.
சிறு அச்சுப்பிழைகள்:
பக்கம் 45- எல்லை இளங்கிளியே.. என்றிருக்கிறது… “எல்லே இளங்கிளியே…எனவும்,
பக்கம் 49 வல்லே என் என்றிருக்கிறது… வல்லை உன்.. எனவும் மாற்றவேண்டும்.
ஆண்டாளைப் பற்றியும், அரங்கன் கோவில் நிகழ்வுகள் பற்றியும், ஆய்தமிழையும், வழக்குத்தமிழையும் ஒருங்கிணைத்து அரிய வரலாற்றுத் தகவல்களையும், படிமங்களையும் தேடிப்படிப்போருக்கு அள்ளித்தருகின்றச் சிறந்தநூலாக “இப்படிக்கு கோதை” விளங்குகிறது. தமிழன்பர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் வாங்கவேண்டிய நூல்.
நாளை (06/01/2017) சென்னைப் புத்தகத்திருவிழாவில் கடை எண் 409 இல் கிடைக்கும். மின்னஞ்சல் மூலமும் வாங்கலாம். கோதை பதிப்பகம், வேலூர், விலை ரூ. 143. (Email: thenuvellore@gmail.com)
இப்படிக்கு
கோதை
அன்பன்
05/01/2017

Devanurpudur DrAnbu Selvan feeling proud withShahjahan R

Advertisements
 
Leave a comment

Posted by on January 5, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: