RSS

40 வது சென்னை புத்தக கண்காட்சி – டிப்ஸ்

05 Jan

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதங்களில் சென்னையில் களைகட்டும் புத்தக் திருவிழா தொடங்கி விட்டது…
ஒவ்வொரு வருடமும் நான் செல்வதுண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில் சில டிப்ஸ்கள்.
இது உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே…
1 . முதல் 2 நாட்களில் செல்லாதீங்கள் சரிவர எல்லாம் தயார் நிலையில் இருக்காது.
கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும்.
2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.
3 . விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கும், வேலை நாட்களில் மதியம் 2 மணிக்கு துவங்கும், இரவு 9 மணிக்கு முடியும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள். சாயந்தரம் செல்லாதிர்கள், அனைத்து கடைகளையும் பார்க்க நேரம் கிடைக்காது.
4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.
5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.
6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.
7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.
8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.
9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.
( தற்போது மோடி அரசு எற்படுத்திய பணப்பிரட்சனையால் தற்போது ஆன்லைன் பரிவர்தனைகள் கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் பணம் கொண்டுபோவது நேரத்தை மிச்சப்படுத்தும்)
10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர்,அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.
12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.
13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே இருப்பார்.
14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமா இருக்கும் பராமரிப்பு.
நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்… அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்…. எவ்வளுவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது…. நாமும் பழி தீர்ப்போம்…!!!
இறைவா!! எங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகரிப்பாயாக…ஆமீன்…

Sirajudeen Bin Mustafa Kamal

Advertisements
 
Leave a comment

Posted by on January 5, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: