RSS

கைத்தறி வேட்டி உடுத்தி வந்து …

06 Jan

நான் கல்லூரியில் சேரும்போதே வேட்டிகட்ட ஆரம்பித்து விட்டேன்.
அன்று …
நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக அறிஞர் அண்ணா பாடுபட்டார்.
கழகத் தலைவர்கள் கைத்தறி துணிகளை தோளில் சுமந்துகொண்டு
ஊர் ஊராகச் சென்று விற்றார்கள்.
அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம்
பாட்டாளிகள்
நெசவாளர்கள்
விவசாயிகளின் பட்டறையாகத் திகழ்ந்தது.
அவர்களின் துயரம் தீர்க்கும் சகோதரர்களாக திமுகவினர் இருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக கைத்தறி வேட்டி சேலை துவர்த்து தயாரிப்பவர்கள்
திமுகவை தங்கள் தாய் வீடாகவே நினைத்து வாழ்ந்தார்கள்.
” ஓடி வருகிறான் உதய சூரியன் …. ” என்று நாகூர் ஹனிபா அண்ணன் பாடும்
பாட்டில்கூட நேசவாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.
67 ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே
கூலித் தொழிலார்கள் நெசவாளர்கள் தொழிலாளர்களின் ஓட்டுதான்.
அந்த அளவுக்கு நெசவாளர்களுக்காக நிஜமாகவே அக்கறையோடு
பாடுபட்ட ஒரு இயக்கம் திமுக.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் முழுவதும்
கைத்தறி கண்காட்சிகளை அரசாங்கம் நடத்தியது.
விற்பனையாகும் துணிகளுக்கு கணிசமான தள்ளுபடியையும் அரசாங்கம் வழங்கியது.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த விழாக்களில்
சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு
கைத்தறி ஆடை விற்பனையை ஊக்குவித்தார்கள்.
இருவாரம் நடைபெறும் இந்த விழாக்கள் நகரின் மைய மைதானங்களில் நடைபெறும்.
தினமும் கலைநிகல்சிகள் களைகட்டும்.
நானெல்லாம் தினந்தோறும் கண்காட்சிக்கு சென்று விடுவதுண்டு.
ஈரோடு , வடசேரி , பள்ளியாடி , காஞ்சிபுரம் என்று தமிழகத்தின் பெரும்பாலான
ஊர்களிலிருந்து வந்து நெசவாளர்கள் ஸ்டால் வைத்திருப்பார்கள்.
பெரிய கரை போட்ட வேட்டிகளை விரும்பி வாங்கி மறுநாள் அதை
கல்லூரிக்கு உடுத்திக் கொண்டு போகும்போது மனசெல்லாம்
புதுமாப்பிள்ளைபோல் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும்.
காலேஜில் படிக்கும்போது ஆரம்பித்த வேட்டி கட்டும் பழக்கம் இன்றுவரை
தொடர்கிறது.
கல்லூரிக்கு ஒருநாள் கூட நான் பேன்ட் போட்டு சென்றதில்லை என்பது
ஆச்சரியமான உண்மை.
கைத்தறி பொருட்காட்சி வந்தாலே வீடுகளிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடும்.
அப்போது அத்தனை பிரபலமில்லாத கைத்தறி சேலைகளை பெண்கள் விரும்பி அணிய
ஆரம்பித்தார்கள்.
அதுமட்டுமல்ல …
ஈரோடெக்ஸ் டவல்களை அப்போது உபயோகிக்க ஆரம்பித்து இன்றுவரை
அதே பிரண்ட்தான் தலை துவட்ட உபயோகிக்கிறேன்.
என் தலையிலுள்ள முடியெல்லாம் காணாமல் போக காரணமே ஈரோடெக்ஸ் டவல்கள்தான்.
கைத்தறி தலையணை உறைகள் , திரைச் சீலைகள் மற்றும் போர்வைகள்தான்
எங்கள் இல்லத்திற்கு நாங்கள் உபயோகிக்கிறோம்.
ஒருமுறை நாகர்கோயிலில் நடந்த கைத்தறி விழாவில் அமைச்சர் கண்ணப்பனோடு
சொல்லின் செல்வர் இரவண சமுத்திரம் பீர்முஹம்மது அவர்களும் கலந்து கொண்டு
கைத்தறி ஆடைகளின் கீர்த்திகளை தனக்கே உரிய பாணியில் அவர் எடுத்துரைக்க
அந்த சொற்சுவையில் மக்கள் கூட்டம் சொக்கி நின்ற காட்சியையும் மறக்க முடியாது.
கைத்தறி வேட்டி உடுத்தும் நாளெல்லாம் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி தானாகவே வந்து
ஒட்டிக் கொள்கிறது .
நெசவாளர்களை ஆதரித்து அவர்களின் துயரங்களை போக்கிய கழக ஆட்சி
இப்போது இல்லை.
கைத்தறி கண்காட்சிகளும் இல்லை.
கைத்தறி வேட்டி உடுத்தி வந்து
இன்றைய ஜும்மாத் தொழுகையில் கலந்து கொண்டது
ஜும்மா தின மகிழ்வோடு மற்றொரு மகிழ்ச்சி ….!

15822921_1219064061505654_3260028925103845280_n

Abu Haashima
Advertisements
 
Leave a comment

Posted by on January 6, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: