RSS

குடியரசு தின சிந்தனைகள்

27 Jan

Vavar F Habibullah

மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு
தேர்வு செய்யப்பட்ட ஆளவந்தார்களால்
நடத்தப்படும் மக்களாட்சியே ஜனநாயகம்.
மன்னர்களின் தர்பார்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் சாதாரண
குடி மக்ளை குறி வைத்தே அந்த காலங்களில் நகர்த்தப்பட்டன.
மன்னர்களின் தயவில் இந்திய திருநாட்டில் காலடி எடுத்து வைத்த காலணி ஆதிக்கம் மன்னர்களை வேரோடு அழித்து மக்களை அழித்து தாய் மண்ணின் கருவூலங்களை கொள்ளையடித்து நாட்டை சீரழித்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்,
பாதுகாப்பற்ற நலிந்த மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பலாத்காரங்கள், அடக்கு முறைகள் காலணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க சாதாரண மக்களையும் தூண்டின.
சுதந்திர தாகம் பற்றி எரிந்ததன் விளைவு வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி அடித்ததன் மூலம் சற்று தணிந்தது.
1947 ஆகஸ்ட் 15 ம் நாள் – காலணி ஆதிக்கம் அகன்று இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்.
ஆட்சியாளர்கள் மாறினார்கள். ஆனால்
மக்களை ஆளவந்த ஆளவந்தார்கள்
மனநிலையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.
மவுண்ட் பேட்டன் இடத்தில் நமது ஊர் ராஜாஜி கவர்னர் ஜெனரல் என்ற சர்வ வல்லமை படைத்த அதிகார பீடத்தில் அமர்ந்தார்.
காந்தியின் சம்பந்தி தான் ராஜாஜி.
தமிழ் நாட்டில் – வெள்ளையனை எதிர்த்தது
போலவே ராஜாஜியையும் எதிர்த்தார் தந்தை பெரியார். தமிழராய் இருந்தும் குலக்கல்வி திட்டத்தை ஆதரித்தார் ராஜாஜி. இதை எதிர்த் தார் பெரியார்.ஹிந்தி தான் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று பகிரங்கமாக குரல் கொடுத் தார் ராஜாஜி.இதை வன்மையாக கண்டித்தார் பெரியார்.நடந்த கலவரத்தில் தாளமுத்து, நடராஜன் இறந்த போன துயரம் தமிழ் உணர்வு கொண்டவர்கள் மறக்க இயலாத பழைய கதை.
வடநாடு வாழ்கிறது தென்னாடு தேய்கிறது
என்ற தமிழ் கோஷங்கள் எல்லாம் இதை
யொட்டி எழுந்த தமிழனின் மனக்குமுறல்களே.
டெல்லியின் அடக்குமுறை, ஆட்சி அதிகாரம் கண்டு பயந்ததன் விளைவே திராவிட நாடு திராவிடற்கே என்ற கொள்கை முழக்கம் கூட கரைந்து போனதற்கான காரணம்.
இந்திய அரசியல் சாசன சட்டத்தை…..
வடிவமைத்து தந்த அம்பேத்கார் கூட,
ஹரிஜன் என்ற காந்தி கண்டுபிடித்த (கடவுளின் குழந்தை )உப பெயராலேயே அழைக்கப்பட்டார்.
வெறுப்புற்ற அவர் பவுத்த மதத்தை
தழுவினார். அரசியல் துறவியானார்.
தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர்
சூடக்கூட மத்திய அரசிடம் தான் கையேந்த
வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தமிழ் நாட்டில், வட இந்தியர்களின் இந்தியை திணிக்க முற்பட்டதை எதிர்த்து பெரியார்
போராடினார் என்றால் அவர் வழிவந்த
அண்ணாவும் கலைஞரும் கழகத்தினரும் அறவழியில் தான் போராடினர்.
தமிழராக இருந்தும் ராஜாஜியும் பக்தவத்சலமும் தமிழரின் போராட்டத் தை எதிர்த்தனர்.டெல்லிக்கு விசுவாசமாக இருந்தனர்.இதனாலேயே பல குடியரசு தின விழாக்கள் தமிழகத்தில் திராவிட தலைவர் களால் புறக்கணக்கப்பட்டன.
தமிழகத்தில் எவருக்கும் கிடைத்திராத வாய்ப்பு இம்முறை தமிழக முதல்வர் பன்னீர்
செல்வத்திற்கு கிடைத்திருக்கிறது.தமிழக நிரந்தர ஆளுநர் இல்லாத நிலையில் பன்னீர் செல்வத்திற்கு குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கொடியேற்றும் உரிமை அளிக்கப்பட்டிருக்கி றது.
தமிழன கலாச்சார ஜல்லிக்கட்டு நடத்த
போராடிய மாணவர்களை வேட்டையாடிய
மரீனா திடல் தான் இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளையும் தன் மடிமேல் கிடத்தி தாலாட்டி பாடி மகிழ்கிறது.
தலைகள் எல்லாம் ஜ.சி.யு வில் தன்னிலை மறந்து தூங்குகையில் சில வால்களே சூழ் நிலைக்கு தகுந்தாற் போல் தங்களை தலை களாக்க முயற்சி மேற்கொள்கின்றன.நல்ல தலைவர்கள் இல்லாத மாணவர் இயக்கம் போல் சிறந்த தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் இயக்கங்களும் தள்ளாடுகின்றன.
தூய்மை இந்தியாவில் அரசியல் கட்சிகள்
வெளிநாட்டு நன்கொடை முதலீட்டுகளின் உதவியால் தரம் உயர்ந்து பெரும் வணிக நிறுவனங்களாக மாறி வருகின்றன.
பாபா ராம்தேவ் பத்தாயிரம் கோடி அளவுக்கு தன் வியாபார நிறுவனத்தை தரம் உயர்த்தி
இருக்கிறார்.இன்னும் இரண்டு வருடங்களில் அதை ஐம்பதாயிரம் கோடி நிறுவனமாக மாற்ற இருப்பதாக இன்று அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் நமதூர் சுப்பிரமணியசாமி தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறி கவுரவம் அளித்திருக்கிறார்.
Kamala Hassan….
நான் எதையுமே டெல்லியில் சென்று பொறுக்குவதில்லை என்று டுவிட்டரில்
சூடாக கருத்து பதிவு செய்திருக்கிறார்.
திமுக வின் நாச வேலைதான் மாணவர் வன்முறைக்கு காரணம் என்று பொன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அரபு ஷெய்குகள் நமது சிறப்பு விருந்தினர் களாக இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பு செய்திருக்கிறார்கள்.
இனி வரும் காலங்களில்…..
ஒரு புதிய கிழக்கு இந்திய கம்பெனி இந்தியா வுக்குள் காலடி பதிக்கலாம்.
பதிய ராபர்ட் கிளைவுகளும் மவுண்ட் பேட்டன்களும் தோன்றலாம்.அப்போது தமிழினத்தை அழிவினின்றும் காத்திட சித்தூர்ராணி போல்….
சின்னம்மாக்கள் முன் வரலாம்.
கட்ட பொம்மன் போல் கேப்டன்களும் தளபதிகளும் போராடலாம்.அதை தடுத்திட
சில எட்டப்பர்களும் தோன்றலாம்.
ஜனநாயகத்தில் கூட பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக சட்டத்தை வளைக்க முடியாது என்பது தான் அரசியல் சட்டம் சொல்லும் நீதியாகும்.

Vavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on January 27, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: