RSS

Monthly Archives: February 2017

ஹானர்ஸ் செல்வகுமார்

எழுதியவர் யுவகிருஷ்ணா

_dsc0048“நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு.

“ஏன்?”

“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”

“பரவாயில்லை. சொல்லுங்க”

“இந்தப் படிப்பு மின்னியல்/மின்னணுவியல் சம்பந்தமானது. நிறைய லேப் ஒர்க் இருக்கும். நடக்க முடியாத உங்களால் ஏதாவது விபத்து நடந்தா பெரிய பாதிப்பு ஏற்படும்”

சிறுவயதில் இருந்தே கனவில் கட்டிய மண்கோட்டை கண் முன்பாக சிதறுவதை கண்டு மனசு உடைந்தார் செல்வா. Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on February 28, 2017 in 1

 

ஒட்டாத உறவுகள்:

 

சில உறவுகளைப் பொறுத்த வரை. நாம் அவர்களிடமோ அவர்கள் நம்மிடமோ எந்த வித சண்டை சச்சரவுகள் இல்லாத போதும் ஒரு வித வெறுப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.
உப்புக்கு சப்பான இந்த உறவுகளால் அப்பப்ப பிரச்சனைகள் வருவதும்,போவதுமாக இருக்கும்.
அவர்கள் நம்மை குறைசொல்வதும், நாம் அவர்களை குறைசொல்வதும், குறைவில்லாமல் இருக்கும்.
நல்லது நடந்தால் எரிச்சலடைவதும். துன்பமென்றால் மனதுக்குள் இன்பமடைவதும் இனம் புரியாமல் இருந்து கொண்டே இருக்கும்.
மனதிற்க்குள் பகை கொண்ட உறவு.
நேரில் சிரித்து பேரளவில் உறவாடும்.
உறவுகளுக்குள் எரிச்சல் வந்தால்.
விரிசல்களும் வரும் தானே.

Jaffarullah Jafar

1395428_690120064435812_332264283540535294_n

அன்புடன் வாழ்த்துகள் ஜபருல்லா ஜபார் அவர்களுக்கு

 
Leave a comment

Posted by on February 23, 2017 in 1

 

கமால் ஹாசன்

sap-annamalai

“என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”

“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”

“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”

ரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே? இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 21, 2017 in 1

 

தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும் துவண்டு

 

தொழில் முறையில் பழக்கமாகி நட்பு தொடர்ந்தது நான் வேலை மாற்றம் வேண்டியபொழுது அவரிடம் சொன்னேன் சில வாரங்களுக்கு ஓர் முறை அவரை அழைத்தேன் . வாய்ப்பு கிட்டியபோது எனது வேலை விண்ணப்பத்தை அவருக்கு மின்னஞ்சல் செய்தேன். அவரும் அந்த வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்லும் நேரத்திலும் எனக்கு ஓர் நேர்முக வாய்ப்பை அமைத்து தந்தார் . நான் இன்று இருக்கும் வேலைக்கான முதல் சுழி அவர் போட்டது.
சில வேளைகளில் தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும் துவண்டு விடவேண்டாம் தோழமைகளே நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். தாமதம் என்றுமே நன்மையை நாடி அதில் இறைவனின் அருள் இருக்கும்.

14900524_1497764686917548_2351461654765969707_nSheik Mohamed Sulaiman

 
Leave a comment

Posted by on February 20, 2017 in 1

 

‘நீயா,நானா?’ திரு. கோபிநாத் அவர்களுக்கு…

 

gopinathஉங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
“நம்ம தோசைய எடுத்துட்டு போய் காய்கறிங்கள சேத்து பிஸ்சான்னு பேர் வச்சு நம்மகிட்டயே மார்கெட்டிங் பண்றானுங்க”, “விடுங்க சார் அவங்கள..இளைய சமுதாயத்துக்கு நீங்க கத்துத் தர வேணாம்..அவங்களே கத்துக்குவாங்க” என்று முகத்தில் வழியும் வியர்வையினை விரல்களால் துடைத்துக் கொண்டே பல்வேறு கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பேசிய வீரியமிக்க பேச்சுகளே இளைய சமுதாயத்தின் இதயங்களில் உங்களுக்கு ஒரு தனி இடத்தைத் தந்தது.
அத்தோடு சிசுக்கொலை, தனியார் மருத்துவமனைகளின் அட்டுழியங்கள், வங்கிகளின் அடாவடிகள், மூட நம்பிக்கைகள் ஒழிப்பு என்று ‘நீயா, நானா?’வில் நீங்கள் எடுத்துக் கொண்ட பல GREY Topics, அவற்றின் இடையிடையில் நீங்கள் வெளிப்படுத்தும் அறச்சீற்றம் இவையெல்லாம் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக உங்களை உயர்த்தியது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 19, 2017 in 1

 

என்னில் இருப்பது ….!

 

என்னில் இருப்பது ….!
என் வியர்வையில்
விளைவதென் வளம்
என் உழைப்பில்
உருவாவதென் உயர்வு
என் பார்வையில்
தெரிவதென் பாதை
என் எண்ணத்தில்
உதிப்பதென் தெளிவு
என் கனவில்
காண்பதென் நினைவு
என் செயலில்
கிடைப்பதென் ஊதியம் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 3, 2017 in 1