என்னில் இருப்பது ….!

 

என்னில் இருப்பது ….!
என் வியர்வையில்
விளைவதென் வளம்
என் உழைப்பில்
உருவாவதென் உயர்வு
என் பார்வையில்
தெரிவதென் பாதை
என் எண்ணத்தில்
உதிப்பதென் தெளிவு
என் கனவில்
காண்பதென் நினைவு
என் செயலில்
கிடைப்பதென் ஊதியம்
என் சேமிப்பில்
சேருவதென் எதிர்காலம்
என் வாசிப்பில்
வளருவதென் அறிவு
என் நேசிப்பில்
பெருகுவதென் அன்பு
என் நம்பிக்கையில்
இருப்பதென் பிடிப்பு
என் தவிப்பில்
தெரிவதென் ஆற்றாமை
என் வீரத்தில்
வெளிப்படுவதென் பயிற்சி
என் வெற்றியில்
களிப்பதென் முயற்சி
என் குணத்தில்
மிளிருவதென் குலம்
என் பழக்கத்தில்
புழங்குவதென் பாசம்
என் அன்பில்
அறியப்படுவதென் ஆன்மா
என் உயிரில்
உறைந்திருப்பதென் பண்பு
என் உள்ளத்தில்
நிறைந்திருப்பதென் நேர்மை
என் ஈகையில்
இழைந்திருப்பதென் மோட்சம்
என் வணக்கத்தில்
இருப்பதென் இறைவன்

funphotobox1170251247zdohjjராஜா வாவுபிள்ளை

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment