RSS

எனக்கும் ஒரு இன்விடேசன் வந்திருக்கிறது. / Vavar F Habibullah

16 Mar

எம்மதமும் சம்மதம்
மத நல்லிணக்க அமைச்சகம் ( Ministry of Tolerance) ஒன்றை துபை மற்றும் அபுதாபி அரசுகள் நிருவி உலக மத ஒற்றுமைக்கு வழிகாட்டி உள்ளன.
200 – க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த மக்கள் வாழும் அரபு அமீரகம் முஸ்லிம் நாடாக இருந்தாலும் மத நல்லிணக்கத்தை பேணி காப்பதில் உறுதி பூண்டுள்ளது.
இன, மத, மொழி கடந்த ‘மனித சகிப்புத்தன்மை’
அரசியல் அமைப்பின் சட்டமாக இங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது.மதத்தின் பெயரால் கலவரம் ஏற்படுத்துபவர் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப இயலாது.
லட்சக்கணக்கான இந்திய மக்களின் தாயகமாக திகழும் ஐக்கிய அரபு நாடுகளில்
இந்து கோவில்களும், சர்ச்சுகளும், சீக்கிய குருத்வாராக்களும் அதிக அளவில் உள்ளன.
பர்- துபையில் சிவன் கோவிலும், கிருஷ்ணா மந்திரும் புகழ் பெற்ற இந்து கோவில்களாக திகழ்கின்றன.லட்சக்கணக்கான இந்து பெரு மக்கள், ஒரு முழுமையான இஸ்லாமிய நாடு
தங்கள் மதத்திற்கு தரும் அளப்பறிய சிறப்பை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர்.
உண்மையான ‘செகூலரிசம்'(secularism) ஒரு இஸ்லாமிய நாட்டில் கடைபிடிக்கப்படுவது நமது இந்திய மக்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்துகிறது.
துபையில் கோவில்களா!!!
இன்றும் நம்ப இயலாத அதிர்ச்சி தரும் ஆனந்த வெளிப்பாடாகவே இந்த உண்மை நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இதற்கெல்லாம் மேலும் புகழ் சேர்க்கும்
விதத்தில் அபுதாபியில் மிகவும் பிரமாண்டமான
இந்து கோவில் ஒன்று அமைய இருக்கிறது.
அபுதாபியின் பிரதான சாலையில் அமைய இருக்கும் இந்த இந்து கோவிலுக்காக அபுதாபி அரச குடும்பம் ஐந்து ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி இருக்கிறது. கோவில் கட்டும் பணிகள் அடுத்த வருட இறுதியில் முடிவடையும்.
அரச குடும்பத்தின் இந்த தாராள மதநல்லிணக்க பெருந்தன்மைக்காக நமது பிரதமர் மோடி தனது நன்றியை வெளிப்படையாக அபுதாபி அரசருக்கு தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய நாட்டை சார்ந்த நமது இந்து சகோதரா்களுக்காக ஒரு பிரமாண்டமான
கோவில் அமைய இருப்பது இந்திய முஸ்லிம்களை மட்டுமல்ல… அராபியர்களை யும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கோவில் கட்டுவது அரச கட்டளை என்பதால் எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. வன்முறை இல்லை.
கடையடைப்பு சம்பவங்கள் இல்லை.
எங்கும் அமைதி…. தன் மக்களின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என்று சொல்வதோடு நிறுத்தி கொள்ளாமல் அதற்கென்றே ஒரு அமைச்சகம். அமைச்சகத்தின் பெயரை கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள்.( MINISTRY FOR HAPPINESS)
தன் நாட்டில் வாழும் மக்களின் அமைதிக்காக ஆனந்தமான அழகான வாழ்க்கைக்காக ஒரு அமைச்சரும் அதற்கான ஒரு அமைச்சகமும்
“மினிஸ்டிரி பார் ஹேப்பினஸ்.”
வாழும் கலையில் பயிற்ச்சி தர ஒரு அமைச்சர்.
மினிஸ்டிரி ஆப் யூத் என்று ஒரு அமைச்சகம் இங்கு அமீரகத்தில் இருக்கிறது.ஒரு இளம் பெண்மணி தான் அதன் அமைச்சர்.அவரின் வயது 22.
நமது ஊர் ஜகத்குரு ஈஷா நாளை துபை
வருகிறார்.துபை வேர்ல்ட் Trade செண்டரில் ஈ்ஷா யோகா மையம் சார்பில் நடைபெறும்
நிகழ்ச்சியில் கலந்து உரையாடுகிறார்.
டிக்கட்டின் விலை 500/ 200/ 75 யுஎஇ திர்ஹம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.இந்திய ரூபாயில் 10000/ 4000/ 1500 வரை வரலாம்.நேரடி தரிசனத்திற்கு மிக அதிகம் செலவாகும்.
எனக்கும் ஒரு இன்விடேசன் வந்திருக்கிறது.
துபை, அபுதாபி, சர்ஜா அரச குடும்பத்தினரின்
விருந்தோம்பலும் அவர்கள் பிற மத அன்பர் களிடம் காட்டும் பரிவும் பாசமும் மனிதாபி மானமும் குறிப்பாக மத நல்லிணக்கமும் ஒரு இந்தியன் என்ற முறையில் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Vavar F Habibullah

Advertisements
 
Leave a comment

Posted by on March 16, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: