RSS

விவசாயிகளின் போராட்டம் …

20 Apr

விவசாயிகளின் போராட்டம் …

வாரங்கள் நான்காய்
சாதனை விவசாயிகளின்
வீரங்கள் நிறைந்த
வேதனை போராட்டங்கள்
தொடருது தில்லியிலே ….
விதைத்து சாகுபடி
செய்திடும் விவசாயிகளை
வதைத்து சாகும்படி
அறிவுறுத்தும் நடுவணரசு ….
வயிற்றுக்கு சோறிடும்
விவசாய பெருமக்களோ
கயிற்றுக்கு முத்தமிட்டு
மடிந்திடும் நிலைகளாய்
உருவெடுக்கும் அவலங்கள்
தமிழக வரலாற்றிலே
படிந்திடும் கறைகளாய் ….
ரணங்கள் நிறைந்த
உழவுத் தொழிலின்
நஷ்டங்களை ஈடாக்க
நிவாரணங்கள் கேட்கிறது
விவசாய பெருங்குடிகள் …
சோறுகள் பொங்கிட
வயல்களில் நெற்களறுத்து
மணமாக வாழ்கிறவர்கள்
வீதியின் வெயிலிலே
ஆடைகளை களைந்து
விதியின் சோதனையிலே
அம்மணமாக கிடக்கிறார்கள் …
ஆளுகிற அரசுகளுக்கு
கண்களிலிருந்தும் பார்வையில்லை
செவிகளிருந்தும் கேட்கவில்லை
நீளுகிற போராட்டத்தை
நிறுத்துகிற துணிவில்லை
போராடும் விசாயிகளுக்கோ
உடலினில் துணியில்லை …
விவசாய கிழவர்களே
உழைக்கும் உழவர்களே
நீங்கள் அவிழ்த்ததோ
உங்களது ஆடைகளை
ஆனால் அவிழ்ந்ததோ
அரசுகளின் ஆடைகள் ….
அப்துல் கபூர்

15622389_1801989133388713_3362029263444783598_n
11.04.2017 ….

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: