RSS

தேடல் காலம் ….!

01 May

 

புகை மூட்டம் இளங்காலை
பனியில் கலந்து
பகலை வரவேற்கும் நேரம்
தனியாய் உன்னைத்தேடி
புதிய இடம்
கண்ணில் தடம் பதித்து
நடந்தே தேடுகிறேன்
நீ இருக்கும் இடத்தை
என்னை மோதுவதுபோல்
செல்லும் வாகனக்கள் வருவது
அங்கிருந்துதானோ
வழிநெடுக ஒவ்வொரு அசைவும்
சேரப்போகும் இடத்தையே
அறிகுறியாய் உணர்த்தின
மனமெங்கும் செய்யப்போகும்
வேலையின் கனவுகளை
சுகமாக சுமந்தே சென்றேன்
நேரம் வெழுக்க
இருண்ட முகத்துடன்
திரண்ட முகம் தெரியா
மனிதர்க்கு இடம்விட்டு
மெல்ல நடந்தேன்
வேலையே உனைத்தேடி
தேர்ந்த இடம் சேர்ந்தும்
தேடியது கிட்டியும்
தொடர்கிறது இன்றும்
தேடல்களின் எண்ணிக்கை
படர்ந்து விரிந்ததினால்
வாழ்க்கையின் பருவகாலங்கள்
மாறிமாறி வந்துகொண்டே இருக்க
அதற்குத் தக்கபடி தேவைகளும்
நில்லாமல் பல்கிப்பெருகி
நாடலின் தேடல் மட்டும்
வாழ்வெல்லாம் தொடருகிறது

1915784_1752216725002117_6437085887224788060_n

ராஜா வாவுபிள்ளை

Advertisements
 
Leave a comment

Posted by on May 1, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: