RSS

இனி தமிழக பண்பாட்டுச் சூழல் எந்த திசையை நோக்கி நகரும்..?

02 Jun

இனி தமிழக பண்பாட்டுச் சூழல் எந்த திசையை நோக்கி நகரும்..?
நேற்று நா.காமராசன். இன்று அப்துல் ரகுமான். இருவருமே அடர்ந்த வனத்துக்குள் ஒற்றையடிப் பாதையை அமைத்தவர்கள். அடுத்தடுத்து வருபவர்கள் செல்ல வேண்டிய திசையை அம்புக்குறியிட்டு காட்டியவர்கள்.
ஒருவகையில் ஆரம்ப பள்ளிகள் என இவர்களைக் குறிப்பிடலாம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை கவிதைகளின் பக்கம் திருப்பியதும், கவிதைகள் சார்ந்து உரையாட வைத்ததும், சொற்களுக்குள்ளும் இசையும் நயமும் தாளமும் உணர்ச்சிகளும் இருக்கின்றன என்பதை உணர வைத்ததும் இவர்களது ஆளுமைகளுக்கு எடுத்துக் காட்டுகள்.
அறிவியல், கணிதம், வணிகம் என மேல்நிலை வகுப்பில் பிரிவது போல் சிறுபத்திரிகை / வெகுஜன இலக்கியம் என இவர்களது பள்ளியில் படித்தவர்கள் பிரிந்து கிளை பரப்பத் துணை நின்றவர்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் பண்பாட்டுச் சூழல் ஆரோக்கியமாக இருக்க தங்களால் முடிந்தவரை இயற்கை உரமிட்டவர்கள். அதற்கு சரியோ தவறோ இருவரிடமும் இருந்த அரசியல் / சித்தாந்த தெளிவும் பார்வையும் உதவியாக இருந்தது.
சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இவர்கள் பதிவு செய்தார்கள். தனி மனித பிரச்னைகளுக்கும் சமூக சிக்கல்களுக்கும் தங்கள் படைப்பில் சம பங்கு அளித்தார்கள். அதனாலேயே இவர்களிடம் படித்த மாணவர்களால் தங்கள் கண் முன்னால் விரிந்து நின்ற இரு பாதைகளையும் நோக்க முடிந்தது.
ஒன்று சிறுபத்திரிகை இலக்கியம். அடுத்தது வெகுஜன இலக்கியம். இரண்டில் ஒன்றை தேர்வு செய்து நகர்ந்தார்கள். நகர வைத்தார்கள்.
முக்கியமான விஷயம், இருவருமே தங்களுக்கான பாரம்பரியத்தை உருவாக்கினார்கள் என்பது. நா.காமராசன் இல்லையேல் வைரமுத்து இல்லை. அப்துல் ரகுமான் இல்லையேல் இன்று சிறுபத்திரிகை இலக்கியத்தை ஆளும் இளம் கவிஞர்கள் இல்லை.
அப்படிப்பட்ட இரு ஆளுமைகளும் இன்று இல்லை. உண்மையில் தமிழக பண்பாட்டுச் சூழலுக்குதான் இதனால் பேரிழப்பு.
இன்று இவர்களைப் போல் வழிநடத்தக் கூடிய ஆரம்பநிலை பள்ளிகள் இல்லை. அதனாலேயே எதை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவும் இப்போது பலரிடம் இல்லை.
1967ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது அவ்வளவு கவிதைகள் பிறந்தன. அத்தனை வீரியமிக்க இளம் கவிகள் பூத்தார்கள்.
இன்று ‘மெரினா புரட்சி’ தொடங்கி மாட்டிறைச்சி தடை வரை அடுக்கடுக்காக அத்தனை சம்பவங்கள் நடந்தபோதும் –
வெகுஜன தளத்தில் போர் குணம் மிக்க கவிதைகள் பிறக்கவேயில்லை.
வெகுஜன எழுத்தையே சிறுபத்திரிகை மரபாகவும் சிறுபத்திரிகை எழுத்தையே வெகுஜன மரபாகவும் மாற்றும் வேலைகள்தான் நாள்தோறும் நடக்கின்றன.
அரசியலிலும் சமூகத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் குழப்பமும், தேர்வு செய்யும் தெளிவின்மையும் –
பண்பாட்டுச் சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நா.காமராசன், அப்துல் ரகுமான் ஆகியோரின் மறைவு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளையும் தகர்த்திருக்கிறது.
அடர்வனத்துக்குள் செல்ல அமைக்கப்பட்ட ஒன்றையடிப் பாதைகள் சரசரவென அழிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் விஸ்வரூபம் எடுத்து கண்முன்னால் விரிந்து நிற்கிறது காடு.
இதற்குள் எப்படி நுழைவது… இனி வரும் காலத்துக்கான பண்பாட்டுச் சூழல் எப்படியிருக்கும்?
அதை சமூகமே தீர்மானிக்கும். பாதையும் அதற்கு ஏற்பவே அமையும்…
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஒழுங்குப்படுத்த, ஒருங்கிணைக்க தங்களால் முடிந்த வரை இறுதிவரை உழைத்த இரு ஆசான்களுக்கும் அஞ்சலி.

17353143_10212441866911299_1811474891566514050_nகே. என். சிவராமன்

Advertisements
 
Leave a comment

Posted by on June 2, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: